அப்பாவின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ ரீமேக்கில் நடிக்க ஆசை: கௌதம் கார்த்திக்
சென்னை: மணிரத்னத்தின் 'கடல்' படம் மூலம் அறிமுகமானவர் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்.
'கடல்' படத்துக்குப் பிறகு கைவசம் மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார். அதில் ஒன்று தான் 'என்னமோ ஏதோ'. இது, 'ஆலாம் மொதலந்தி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
இதில், கவுதம் கார்த்திக் ஜோடிகளாக நிகிஷா பட்டேல், ரகுல் ப்ரீத் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ரவி தியாகராஜன் டைரக்டு செய்கிறார். ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட கௌதம் கார்த்திக் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

ஆசை....
யாருடன் ஜோடி சேர ஆசை?
குறிப்பிட்டு யாரும் இல்லை. எல்லா நடிகைகளுடனும் சேர்ந்து நடிக்கவே அசை.

காதல் மன்னன்...
அப்பா மாதிரி காதல் மன்னராக வருவீர்களா?
காதல் படங்கள் மட்டுமின்றி எல்லா படங்களிலும் நடிக்கவே அசைப் படுகிறேன்.

ரீமேக்...
தாத்தா, அப்பா படங்களில் எதை ரீமேக் செய்ய ஆசை ?
தாத்தா படங்கள் அதிகம் பார்க்கல. ஆனா அப்பா படங்கள்ல பிஸ்தா, உள்ளத்தை அள்ளித்தா ரெண்டுலயும் நடிக்கணும்னு ஆசை. ரெண்டுமே ஊட்டியில எடுத்த படங்கள். அவ்வளோ நல்லா இருக்கும்.

வருத்தப்படாத வாலிபர்....
‘கடல்' ஓடவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?''
‘கடல்' படம் வெற்றி பெறாதது பற்றி நான் வருத்தப்படவில்லை. மணிரத்னம் டைரக்ஷனில் நடித்ததே போதும். எனக்கு அந்த படம் பிடித்து இருந்தது.
இவ்வாறு கெளதம் கார்த்திக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











