வாயைக் கொடுத்து வாங்கிக் கொண்ட ஹீரோ... படவாய்ப்புகள் கைநழுவுவதால் கவலை

சென்னை : தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயனாக பார்க்கப்பட்டவர் குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஸ்வின்.

குக் வித் கோமாளி தந்த புகழ் வெளிச்சத்தால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் அஸ்வின்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் இசை வெளியீட்டில் இவர் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் தற்போது பட வாய்ப்புகள் பறிபோகும் நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஸ்வின்

நடிகர் அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் அஸ்வின். இவரும் ஷிவாங்கியும் சேர்ந்து செய்த லூட்டிகள் இந்த நிகழ்ச்சியில் அனைவரது வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக ஷிவாங்கி இவருடன் செய்த காமெடி கலாட்டாக்கள் எவர்கிரீன் சம்பவங்களாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த புகழையடுத்து கோலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார் அஸ்வின். இவரை வைத்து அடுத்தடுத்து 3 படங்களை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் போட்டதாக கூறப்பட்டது.

இசை வெளியீட்டில் சர்ச்சை பேச்சு

இசை வெளியீட்டில் சர்ச்சை பேச்சு

இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள என்ன சொல்லப் போகிறாய் படத்தின் இசை வெளியீட்டில் பேசிய அஸ்வின், இயக்குநர்களிடம் கதை கேட்கும்போது தான் தூங்கி விடுவேன் என்றும் தான் முதல் முறையாக கவனமாக கேட்ட கதை என்ன சொல்ல போகிறாய் இயக்குநரின் கதைதான் என்றும் மேடையில் பேசினார்.

இயக்குநர்கள் கண்டனம்

இயக்குநர்கள் கண்டனம்

என்ன சொல்ல போகிறாய் படத்தை உயர்த்தி பேசும் வகையில் அவர் பேசிய இந்த பேச்சு இயக்குநர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உதவி இயக்குநர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதையடுத்து என்ன சொல்லப் போகிறாய் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

அஸ்வின் மன்னிப்பு

அஸ்வின் மன்னிப்பு

தொடர்ந்து தன்னுடைய பேச்சுக்கு அஸ்வின் மன்னிப்பு கேட்டாலும், அவரது இந்தப் பேச்சு பட வாய்ப்புகள் தட்டிப் போக தற்போது காரணமாகியுள்ளது. அவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்சை திருப்பி வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Jaibhim Manikandan Vs Ashwin Kumar | சமூகவளைதளத்தில் Round அடிக்கும் இருவரின் Pressmeet
முழி பிதுங்கியுள்ள ஹீரோ

முழி பிதுங்கியுள்ள ஹீரோ

இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கியுள்ளார் அஸ்வின். அடுத்த சிவாகார்த்திகேயன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட அஸ்வின், மேடையில் தன்னுடைய தாறுமாறு பேச்சால் பட வாய்ப்புகள் பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X