Vijay: 2026 ஆரம்பமே விஜய்க்கு வெற்றி கிடைக்கலையே.. தேர்தலில் கப்பு கிடைக்குமா பிகிலே?
சென்னை: 2026ம் ஆண்டு விஜய்க்கு ஜாதகம் சூப்பராக இருக்கு என பிரபல ஜோதிடர் ஷெல்வி உள்ளிட்ட பலர் ஆருடம் கூறினர். தணிக்கை குழு பிரச்னையில்லாமல் விஜய் அசால்ட்டாக சரி செய்து திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என தவெகவினரும் நம்பிக்கொண்டே இருந்தனர்.
ஆனால், கடைசியில், என்ன ஆச்சுன்னா விஜய்யின் ஜன நாயகன் படத்தை இந்த மாதமே ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகி விட்டது. ஜன நாயகன், பிப்ரவரி நாயகன், மார்ச் நாயகன், ஏப்ரல் நாயகன் என மாதங்களை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு மட்டும் பல ஆண்டுகளாக ரிலீஸ் பிரச்னை ஏன் வந்துக் கொண்டே இருக்கிறது. பராசக்தி டீம் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல கடைசி வரை ஜனவரி 10 படம் வந்துடும், அதற்கு முன் சென்சார் வந்துடும் என உறுதியாக இருந்ததை போலவே அவர்களுக்கு சென்சார் கிடைத்து நாளை படமும் ரிலீஸ் ஆகிறது.
2026 ஆரம்பமே விஜய்க்கு அடி: ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் வெளியானால் கிட்டத்தட்ட 2 வார பொங்கல் விடுமுறை கலெக்ஷனையும் அள்ளிவிடலாம் என திட்டமிட்டு பொங்கல் ரிலீஸை ஏற்பாடு செய்த நிலையில், அதற்கு முட்டுக்கட்டையாக சிவகார்த்திகேயனின் பராசக்தி போட்டிக்கு வந்தது. ஜன நாயகன் டிரைலரை விட பராசக்தி படத்தின் டிரைலர் அதிக வியூஸை அள்ளி அங்கேயும் விஜய்க்கு அடி விழுந்த நிலையில், கடைசியாக இடியே விழுந்தது போல ஜனவரி மாதமே ஜன நாயகன் வெளியாகாது என்கிற நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமே பிப்ரவரி மாதம் தான் தள்ளிப்போய் ரிலீஸ் ஆனது.

கப்பு கிடைக்குமா பிகிலே: அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சிவாஜி பட ரஜினிகாந்த் மாதிரி விஜய் நினைத்தாலும், தனக்கு எதிராக புதிதாக ஒருத்தன் கடையை போட்டால், அவன் கதி என்ன ஆகும் என்கிற அரசியல் விளையாட்டை கரூர் சம்பவத்திலேயே விஜய் நன்கு உணர்ந்திருப்பார். அதன் பின்னராவது உஷாராகி ஜன நாயகன் படத்தையாவது திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வார் மலேசியாவில் ஆடியோ லான்ச் வைத்து அசத்தியதை போல என ரசிகர்களும் தொண்டர்களும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், லட்டு வச்சேன்னு நினைச்சியா, நட்டுல வச்சேன் என்பது போல சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படம் வெளியாவதே சந்தேகமாகி விட்டது. இதற்கு மேல் சட்டசபை தேர்தல் களத்தில் மேலும், பல சிக்கல்கள் வரும் அதையெல்லாம் விஜய் மற்றும் அவரது தரப்பு எப்படி சந்தித்து சாதிக்கப் போகிறது என்பது டவுட்டாகவே உள்ளது.
மக்கள் சப்போர்ட்: மக்களுக்காக சுயநலமின்றி அரசியலுக்கு வர முடிவெடுத்துள்ள விஜய்க்கு உண்மையாகவே எதிரான சக்திகள் திரண்டு நின்று அவரது படத்தை முடக்கியிருந்தால், அதற்கு எதிராக அவருக்கு மக்கள் சப்போர்ட் கிடைக்குமா? இந்த பொங்கலுக்கு எந்த படம் வருதோ அதை ஜாலியாக குடும்பத்துடன் சென்று பார்த்து விடுவார்கள். வரும் தேர்தலில் ஆவது விஜய்க்கு மக்கள் சப்போர்ட் எந்தளவுக்கு கிடைக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











