twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு நடிப்பு தான், அரசியல் எல்லாம் வேண்டாம்: சொல்கிறார் நடிகர் சன்னி தியோல்

    By Siva
    |

    மும்பை: தான் அரசியலுக்கும் வரவில்லை, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று பாலிவுட் நடிகர் சன்னி தியோல் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாஜகவில் சேர்வார் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் இது குறித்து சன்னி தியோல் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

    அரசியல்

    அரசியல்

    எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் ஒரு நடிகன், தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறேன். என் தந்தையும், நடிகருமான தர்மேந்திரா அரசியலில் சேர்ந்து எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை பார்த்துள்ளேன். (தர்மேந்திரா கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.)

    தர்மேந்திரா

    தர்மேந்திரா

    என் தந்தை அரசியலில் ஈடுபட்டு ஒரு வேலையை முடிக்க பலரை எதிர்பார்த்திருக்க வேண்டியதை நான் பார்த்துள்ளேன். அப்படி இருக்க நான் ஏன் அரசியலுக்கு போக வேண்டும்?

    பாஜக

    பாஜக

    உத்த பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் சத்யபால் சிங்கின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டேன். அது அவருக்காக தானே அன்றி கட்சிக்காக இல்லை. அவர் மும்பையின் கமிஷனராக இருந்தபோது தனது பணியை செவ்வனே செய்தவர். தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றுள்ளார்.

    மோடி

    மோடி

    பிரதமர் பதவிக்கு யார் சரியான நபர் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஒரு மாற்றம் தேவை.(மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பேச சன்னி மறுத்துவிட்டார்)

    வாக்கு

    வாக்கு

    அனைவரும் வாக்களியுங்கள் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன். வாக்களித்து சரியான நபர்களை தேர்வு செய்யுங்கள். வாக்களிப்பது முக்கியமான ஒன்று என்றார் சன்னி தியோல்.

    English summary
    Putting an end to all speculations regarding his participation in upcoming Lok Sabha election, Bollywood actor Sunny Deol clarified that he is not willing to join politics. Unlike media reports, the actor stated that he will not contest election and he is not supporting any political party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X