மாமனார் - மருமகன் பொங்கல் போட்டியில் வெல்லப்போவது யார்?
சென்னை : பண்டிகை என்றால் நிச்சயம் மாஸ் ஹீரோ படங்கள் ஒன்றாவது வெளியாகும். புது ரிலீஸ் படங்கள் இல்லாமல் கொண்டாட்டமா? சான்ஸே இல்ல.
இந்த தீபாவளிக்கு இளைய தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படமும் கார்த்தி நடித்த 'கைதி'திரைப்படமும் வெளியாகி திரையரங்குகளில் இன்று வரை சக்கை போடு போட்டுவருகிறது. இன்னும் அந்த கொண்டாட்டத்தில் இருந்தே மக்கள் வெளிவரவில்லை. ஆனால் அதற்குள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போகும் படம் குறித்து ரசிகர்களிடையே போட்டி ஆரம்பித்துவிட்டது.

2019 பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படமும் தல நடித்த 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாகி ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது மறக்க முடியாதது. இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.
அதே ராசி இந்த தீபாவளிக்கு வெளியான படங்களுக்கும் அமைந்தது. பிகில் மற்றும் கைதி இரண்டிற்குமே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
அந்த வகையில் வர போகும் பொங்கல் பண்டிகைக்கு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்-நயன் தாரா நடித்து வரும் 'தர்பார்' திரைப்படமும் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'பட்டாஸ் ' திரைப்படமும் வெளியாகவுள்ளது ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நிச்சயம் ஒரு பொங்கல் திரை விருந்தாக இருக்க போகிறது என்பது உண்மை.
மாமனாருக்கும் மருமகனுக்கும் இந்த பொங்கல் போட்டி எப்படி இருக்க போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











