ரோலக்ஸ் கேரக்டரை அப்படியே காப்பியடிச்சது மாதிரியே இருக்கே.. பகத் ஃபாசிலிடம் கேட்ட மலையாள ரசிகர்!
திருவனந்தபுரம்: விக்ரம், மாமன்னன் என வரிசையாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் பகத் ஃபாசில் நடிப்பில் இந்த வாரம் எப்படியும் பதினோராம் தேதி ஆவேஷம் எனும் மலையாள படம் வெளியாகிறது. அந்த படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் பகத் ஃபாஸில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் பகத் ஃபாசிலிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய கதாபாத்திரம் அப்படியே நீங்கள் நடித்த விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் போலவே இருக்கிறதே? அந்த ஒற்றுமை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரசிகரின் அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத பகத் ஃபாசில் அளித்துள்ள விளக்க வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பகத் ஃபாசில் ஃபயரு: மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் ஃபாசில் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் பெரிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மாஸ் காட்டி வருகிறார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்த பகத் ஃபாஸில் அடுத்ததாக ரஜினிகாந்த் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் நடிப்பில் மிரட்டிய பகத் ஃபாசில் புஷ்பா 2 படத்திலும் ஃபயர் பர்ஃபார்மன்ஸை கொடுக்க காத்திருக்கிறார்.

ரோலக்ஸ் போலவே: ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள ஆவேஷம் திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான நிலையில், சமீபத்தில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார் பகத் ஃபாசில். அப்போது அவரிடம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் பாதிப்பு இந்தப் படத்தில் இருப்பது ஏன்? அதைப்போலவே பட்டா கத்தி, மார்ஷல் ரேடியோ எல்லாம் வச்சிட்டு இருக்கீங்களே என கேள்வி எழுப்பினார்.
இரண்டும் வேற: ரோலக்ஸ் ரொம்பவே இன்டென்ஸான கதாபாத்திரம் அதில், ஜாலிக்கு இடமே இல்லை. ஆனால், ஆவேஷம் படத்தில் வரும் ரங்கா கதாபாத்திரம் செம ஃபன்னான கதாபாத்திரம். நீங்கள் நிச்சயம் படம் பார்க்கும் போது ரங்காவை தனியாக ரசிப்பீர்கள். உங்கள் கண்முன் ரோலக்ஸ் கண்டிப்பாக வரமாட்டார் என பதிலளித்துள்ளார் பகத் ஃபாசில். மாமன்னன் படத்தில் ரத்தினவேலுவாக மிரட்டிய பகத் ஃபாசிலின் அடுத்த அவதாரத்தை காண ரசிகர்கள் செம வெயிட்டிங். இந்த ஆண்டு ஆவேஷம், புஷ்பா 2, வேட்டையன் என தென்னிந்தியாவையே தனது நடிப்பால் அசத்த காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











