»   »  மலையாளத்தில் தமிழ் பாலா

மலையாளத்தில் தமிழ் பாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bala with Sandhya
தமிழில் தேறாமல் போன பாலா மலையாளத்தில் கணிசமான வெற்றியைக் குவித்துள்ளார். அவர் நடித்துள்ள மலையாளப் படமான பூட் டிசம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறதாம்.

தமிழில் அன்பு என்ற படத்தில் நடித்து ஹீரோவானவர் பாலா. ஆனால் அதன் பின்னர் அவருக்கு அதிர்ஷ்டமும் இல்லை, பட வாய்ப்புகளும் இல்லை. இதனால் இடையில் பனியன் கம்பெனி விளம்பரத்தில் நடித்தார். அதன் பிறகு பாலா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

நெடுங்காலத்துக்குப் பின் மஞ்சள் வெயில் படத்தில் பிரசன்னாவுக்கு அடுத்த செகண்ட் ஹீரோவாக நடித்தார். இதில் இருவருக்கும் ஜோடி சந்தியா.

தமிழ்தான் பாலாவை கைவிட்டதே தவிர மலையாளம் கை கூப்பி வரவேற்றது. அங்கு சில படங்களில் நடித்துள்ள பாலா, பூட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பிரமீட் சாய்மீரா நிறுவனம் முதல் முறையாக மலையாளத்தில் படத் தயாரிப்பில் குதித்துள்ளது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள முதல் படம் பூட். துப்பறியும், காதல் கதையான இதில், சுரேஷ்கோபி நாயகனாக நடித்துள்ளார். பாலாவுக்கு படத்தில் முக்கிய வேடமாம்.

படத்ைத இயக்கியிருப்பவர் சுரேஷ் கோபியை வைத்து கமிஷனர் உள்ளிட்ட சில வெற்றிப் படங்களைக் கொடுத்த மலையாள ஆக்ஷன் பட மன்னன் ஷாஜி கைலாஷ்.

பாலாவுக்கு இதில் ஜோடியாக ஹனி நடித்துள்ளார். பெயரைப் போலவே பார்க்கவும் படு ஸ்வீட்டாக இருக்கிறார் ஹனி.

துப்பறியும் அதிகாரியாக சுரேஷ்கோபி நடித்துள்ளார். கேரளாவைக் கலக்கும் ஒரு கொலை வழக்கை விசாரிப்பதற்காக மலைவாசஸ்தலத்திற்கு வருகிறார் கோபி. அங்கு நடக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதையாம்.

கிறிஸ்துமஸையொட்டி திரைக்கு வரும் பூட், வசூலிலும் அள்ளும் என்ற எதிர்பார்ப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது.

Read more about: bala

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil