அஜித் பெயரில் போலி அறிக்கை.. யாரு பார்த்த வேலைடா இது.. அலர்ட் ஆன AK டீம்!
சென்னை: நடிகர் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த 23ஆம், தேதி ரீ ரிலீஸ் ஆன இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இந்த அளவுக்கு எந்த ஒரு படத்தின் ரீ ரிலீஸும் கொண்டாடப்பட்டது இல்லை. இப்படி இருக்கையில் ஓபனிங் என்றாலே அஜித் தான் என்று மீண்டும் ஒருமுறை ரீ ரிலீஸிலும் அஜித் ரசிகர்கள் நிரூபித்துள்ளார்கள்.
பொதுவாக படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே, ரசிகர்கள் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது, மேள தாளம் என தியேட்டரையே திருவிழாவாக மாற்றுவது, ஆட்டம் பாட்டம், பால் அபிஷேகம் என எல்லாம் இருக்கும். அஜித் ரசிகர்கள் இவற்றில் இருந்து ஒரு படி மேலே சென்று, அஜித் அண்மையில் நடித்திருந்த விளம்பரமான கேம்பா குளிர்பானத்தை கொண்டு அஜித்தின் பேனர்களுக்கு அபிஷேகம் செய்தனர்.
போலி அறிக்கை: படம் இப்போதும் தொடர்ந்து சிறப்பாக ஓடிக் கொண்டு உள்ளது. படம் இதுவரை அதாவது படம் ரீ ரிலீஸ் ஆகி ஆறு நாட்களில் ரூபாய் 16 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து அஜித் ரசிகர்கள் மங்காத்தா ரீ ரிலீஸ் கொண்டாட்டங்கள் பிடிக்க வில்லை என்றும், வரும் காலங்களில் தனது படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும், ரசிகர்கள் இப்படி படத்தை கொண்டாடுகிறேன் என்று மக்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டதாக போலியான அறிக்கை உலா வந்தது.

மறுப்பு: இப்படியான அறிக்கைகள் சமூக வலைதளத்தில் உலா வரத் தொடங்கியதும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் தளத்திலோ, அஜித்குமார் ரேஸிங்கின் எக்ஸ் தளத்திலோ, அஜித்தின் மனைவி ஷாலினியின் சமூக வலைதளப் பக்கத்திலோ இப்படியான அறிக்கை எதுவும் இல்லை. இது தொடர்பாக அஜித் தரப்பில் ஊடகத்தினர் விசாரித்தபோது, தாங்கள் அதுபோல எந்த அறிக்கையும் விடவில்லை என்றும், இது முற்றிலும் போலியானது, இதை யாரும் நம்பவும் வேண்டாம் பரப்பவும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். அஜித் தரப்பில் இப்படியான மறுப்பு தெரிவிக்கப்பட்ட பின்னர் தான் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications