தல – தளபதிக்குள்ள இப்படி ஒரு ஃபிரண்ட்ஷிப்பா... சீக்ரெட்டை உடைத்த பிரபல டைரக்டர்
சென்னை : தல அஜித்தும், தளபதி விஜய்யும் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களாக உள்ளனர். இருவரும் நல்ல நண்பர்கள் என பலமுறை காட்டி விட்டனர். இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
1995 ல் வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார். அதிலும் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர். இருந்தாலும் அவர்களின் தீவிர ரசிகர்களுக்குள் யார் டாப் என்ற பிரச்சனை தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது.

விஜய் - அஜித் ஃபிரண்ட்ஷிப்
இந்நிலையில் விஜய் - அஜித் இடையேயான ஃபிரண்ட்ஷிப் பற்றி டைரக்டர் ஏ.எல்.விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. திரையில் போட்டி போட்டு படங்களில் நடித்தாலும் திரைக்கு பின்னால் அவர்களின் நட்பு எவ்வளவு அழகானது என்பதை டைரக்டர் விஜய் விளக்கி உள்ளார்.

இருவரையுமே இயக்கியவர்
விஜய் - அஜித் இருவரையுமே ஏ.எல்.விஜய் டைரக்ட் செய்துள்ளார். அஜித்தை வைத்து கிரீடம் படத்தையும், விஜய்யை வைத்து தலைவா படத்தையும் விஜய் இயக்கி இருந்தார். இந்த இரு படங்களும் ரசிகர்களின் மனங்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும்.

துபாயில் சந்தித்த தல-தளபதி
இந்நிலையில் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் ஏ.எல்.விஜய் கூறுகையில், தலைவா ஷுட்டிங் நடந்த சமயத்தில், புத்தாண்டு விடுமுறைக்காக விஜய் துபாய் சென்றிருந்தார். அதே சமயத்தில் புத்தாண்டு விடுமுறைக்காக அஜித்தும் துபாய் வந்திருந்தார். துபாயில் இரண்டு ஸ்டார் நடிகர்களும் சந்தித்துக் கொண்டனர்.

என்னை கலாய்த்த ஸ்டார்கள்
தல, தளபதி இருவருமே என்னை பற்றி பேசிக் கொண்டனர். எனது செய்கைகளை நடித்துக் காட்டி இருவரும் பேசிக் கொண்டனர். தலைவா ஷுட்டிங்கின் போது மும்பையில் நானும் அஜித்தும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருந்தோம். அவர் அந்த சமயத்தில் ஆரம்பம் படத்தின் ஷுட்டிங்கிற்காக வந்திருந்தார்.

தலைவாவை பார்த்த முதல் நபர்
அப்போது நான் அஜித்தை சந்தித்து, தலைவா படத்தின் போஸ்டரையும் காட்டினேன். தலைவா படத்தின் போஸ்டரை பார்த்த முதல் நபர் அஜித் தான். அதே போல், வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை கேட்ட முதல் நபரும் அஜித் தான். அவரிடம் தான் முதன் முதலில் தலைவா படம் பற்றிய விஷயங்களை பகிர்ந்தேன்.

பாட்டு நிச்சயம் ஹிட்
அஜித்துக்கு அந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது. மறுபடி, மறுபடி போடச் சொல்லி கேட்டார். அந்த பாட்டை கேட்ட பிறகு, வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் நிச்சயம் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகும் என்றார். விஜய்க்கு இந்த பாடல் மிக பொறுத்தமாக இருக்கும் என்றும் சொன்னார். அவர் மிக கணிவான, இனிமையான மனிதர் என்றார் ஏ.எல்.விஜய்.

விஜய் நடிக்க வேண்டிய படமா இது
கிரீடம் படத்தின் கதையை முதலில் விஜய்க்காக தான் டைரக்டர் விஜய் தயார் செய்தாராம். அந்த கதையை விஜய்யிடம் முதலில் கூறி உள்ளார். ஆனால் அந்த சமயத்தில் விஜய் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால், அந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்க டைரக்டர் விஜய் முடிவு செய்தாராம்.
Recommended Video

ரஷ்யா பறக்கும் ஸ்டார்கள்
இது போல் விஜய்யும் அஜித்தும் வெளிநாட்டில் சந்தித்து பேசிய சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளதாம். தற்போது அஜித், வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்கும் இந்த ஷுட்டிங் இந்த மாத இறுதி வரை நடக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆகஸ்ட் 23 ம் தேதி வரை சென்னையில் நடக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங் முடிந்த பிறகு, விஜய்யும் ரஷ்யா செல்ல உள்ளார்.

மீண்டும் சந்திப்பார்களா
பீஸ்ட் படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகள் ரஷ்யாவில் தான் எடுக்கப்பட உள்ளது. இந்த ஷுட்டிங் சமயத்தில் விஜய், அஜித் இருவருமே ரஷ்யாவில் சந்தித்து பேச அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











