தளபதியை எல்லாம் யாராவது தொட முடியுமா? விஜய் போட்டோவை கட்டிப்பிடித்து அழுத ரசிகரைத் தேற்றும் பெண்
சென்னை: நடிகர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அவர் வேறு ஒரு நடிகையுடன் நெருங்கிப் பழகுவதை நான் ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்றும் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார், விஜய்யின் மனைவி சங்கீதா. இப்படி இருக்கையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் விஜய்யின் புகைப்படத்தைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டு இருக்கிறார். அவரை ஒரு பெண் தேற்றும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்பதை தான் கடந்த 2021ஆம் ஆண்டே கண்டுபிடித்து விட்டதாகவும், அதை கண்டித்த பின்னர், நடிகையுடன் இனிமேல் பழக மாட்டேன் என்று தெரிவித்து தனக்கு உறுதியளித்தார். ஆனால் தொடர்ந்து நடிகையுடன் அவர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் உள்ளது. எனவே விவாகரத்து வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், விஜய் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்தால் நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இணையவாசிகள் கருத்து: இப்படி இருக்கையில் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா என்பதால் அது குறித்து அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்று சிலர் பேசி வருகிறார்கள். அதேபோல், சிலர் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் சங்கீதா தான். ஆதாரங்கள் இருக்கிறது என்று சொல்லுகிறார் என்றால், சும்மா எல்லாம் இல்லை. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அழுத விஜய் ரசிகர்: மேலும் பலரோ, இது திமுகவின் திட்டமிட்ட சதி, அரசியல் சூழ்ச்சியில் விஜய்யின் மனைவி சங்கீதா சிக்கிக் கொண்டுள்ளார் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர் ஒருவர் விஜய்யின் புகைப்படத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு, அழுது கொண்டே, " எப்படித்தான் இந்த மனுஷன் மேல இப்படி குத்தம் சொல்ல மனசு வருதோ, இந்த முகத்த பார்த்தால் குறை சொல்ல மனசு வருமா? தளபதி பேசாமல் சினிமாவிலேயே இருந்திருக்கலாம். ஆனால் அவர் நம்மளுக்கு எல்லாம் நல்லது செய்ய வரேன்னு வந்ததுக்கு அவரை அசிங்கப்படுத்துகிறார்கள்" என்று அழுது கொண்டே கூறிக் கொண்டு இருக்கிறார். அதற்கு அவரைத் தேற்றும் பெண் ஒருவர், " தளபதியை எல்லாம் யாராவது தொட முடியுமா?, இது எல்லாம் அவரை ஒன்னும் செய்யாது என்று கூறுகிறார்.

சுளீர் கேள்வி: இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும், சங்கீதாவுக்கு ஏற்பட்ட நிலைமை உனது சகோதரிகளுக்கோ, தோழிகளுக்கோ நடந்தால் அவர்களின் கணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பீர்களா? இல்லை சகோதரிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் அதனால் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைப்பீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











