Ajith: ரசிகர் கொடுத்த ரோசாப்பூ.. புன்சிரிப்புடன் பெற்றுக்கொண்ட நடிகர் அஜித்!
சென்னை: நடிகர் அஜித் குமார் ரசிகர் ஒருவர் கொடுத்த ரோஜாவை அன்போடு வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.எச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியானது. வங்கியில் நடக்கும் மோசடி குறித்து வெளியான இப்படத்தில் அஜித் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில், விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக படப்பிடிப்பில் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் படக்குழுவினர் இந்தியா திரும்பிய நிலையில், நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் தூபாயில் இருக்கும் வீட்டில் தங்கினார்.

மகளின் பிறந்த நாள்: நடிகர் அஜித், தனது மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை துபாயில் விமர்சையாக கொண்டாடினார். மகளின் பிறந்த நாள் புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல், மகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், நடிகர் அஜித் ஒரு பெண்ணுடன் சேர்ந்த நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியானநிலையில், விஜயகாந்த் மறைவுக்கு ஒரு இரங்கல் சொல்லாத அஜித், மகளின் பிறந்த நாளில் பெண்ணுடன் நடனமாடுகிறார் என்று கடுமையாக விமர்சனம் எழுந்தது.
ரசிகர் கொடுத்த ரோசாப்பூ: ஆனால், அஜித்குமார், விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த அதிகாலை 3 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கேட்டதாகவும், இதனால், விஜயகாந்த் குடும்பத்தினர் வருத்தத்தில் இருப்பதாகவும் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஏற்கனவே அவர் மீது கடுப்பில் இருந்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர் ஒருவர் ரோஜா பூ கொடுக்க, அவர் அதை, அன்போடு வாங்கிக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











