Ajith: அஜித்துடன் ரேஸ் காரில் ஒரு ரெய்டு போன ரசிகர்.. எப்படி இருந்துச்சுன்னு சொல்றதை நீங்களே பாருங்க

சென்னை: நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அணியான அஜித்குமார் ரேஸிங் அணியானது கடந்த வாரம் வரை மலேசியாவில் ரேஸ்களில் கலந்து கொண்டது. இந்நிலையில் இந்தியாவில் கார் ரேஸை பெரும்பான்மையான மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் அஜித் குமார் எடுத்த சிறிய முயற்சி என்றால் அது, தனது ரேஸ் காரில் தனக்கு அருகில் அமர்ந்து ரசிகர்கள் பயணிக்க விரும்பினால், அவர்கள் இந்திய மதிப்பில் ரூபாய் 86 கட்டணமாக செலுத்தி அஜித்துடன் பயணிக்கலாம் என்றும், இந்த பயணமானது, துபாயில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் அஜித் ரசிகர்கள் தொடங்கி, கார் ரேஸில் ஆர்வம் உள்ள பலரும் ஆர்வமாக முன்பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் அஜித்துடன் அவரது ரேஸ் காரில் பயணம் செய்த ரசிகர் ஒருவர் தான் பயணம் செய்த வீடியோவையும், அஜித்துடனான பயணம், உரையாடல் தொடர்பாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, " ஒரு ரேஸ் காரில் பயணிப்பது என்பது எனக்கு இதுதான் முதல் முறை. நான் அஜித்தை சந்தித்து மகிழ்ச்சி. காரில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்ததும் மகிழ்ச்சி. அந்த அதிவேகத்தில் சென்று வளைவுகளில் திரும்புகிறது. அப்போது காரின் மீது ஏகப்பட்ட அழுத்தம் மற்றும் ஃபோர்ஸ் இந்த கார்மீது இருப்பதால் நமக்கே தலை சுற்றுவது போல உள்ளது. அவரைச் சந்தித்ததில் இருந்து அவருடன் கடைசியாக போட்டோ எடுத்துக் கொண்ட வரை அஜித் மிகவும் தன்மையாக பேசினார்.

Fan Who Shared His Experince Race Car Ride With Ajithkumar - Watch

சாதாரண விஷயம் இல்லை: காருக்குள் நமக்கு ஒரு சௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பேசிக் கொண்டே இருந்தார். ரேஸ் கார் ஓட்டுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது ஏதோ ஒரு விமானி விமானத்தை இயக்குவதற்காக அவருக்கு முன் இருப்பதைப் போல பல பட்டன்கள் உள்ளது. வேகத்தை கணிக்க வேண்டும், எதிரில் வரும் வாகனத்தை கவனிக்க வேண்டும், வாகனத்தில் உள்ள மீட்டர்களை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரேஸ் கார் ஓட்டுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

அக்கறை: ஒவ்வொரு முறை வளைவுகளில் கார் திரும்பும்போது அஜித் என்னை நோக்கி, ஆர் யூ ஓகே என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். மிகவும் டயர்டாக இருந்தாலும், அஜித் அங்கு வந்த அனைவருக்கும் கார் ரேஸ் குறித்து அழகாகவும் விரிவாகவும் விவரித்துச் சொன்னார். அதேபோல், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மொத்தத்தில் இது எனக்கு ஒரு லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ்" என்று தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X