ரஜினி X கமல் ஓகே.. தல தளபதியை ஒன்னா நடிச்சா எப்படி இருக்கும்? AI வீடியோவுகு ஃபயர் விடும் ரசிகர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு ப்ரோமோ பிப்ரவரி 21ஆம் தேதி ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரையும் ஒரே ஃப்ரேமில் பார்த்ததுமே ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டார்கள். ப்ரோமோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இப்படி இருக்கும் போது இணையவாசி ஒருவர், இதேபோல் அஜித் மற்றும் விஜய் என இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று உருவாக்கிய ஏ.ஐ வீடியோ மற்றும் ஏ.ஐ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

டீஜே என்ற இன்ஸ்டாகிராம் வாசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தான் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதாவது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோவில் அப்படியே அஜித் மற்றும் விஜய் முகங்களைப் பொருத்தி வீடியோவை உருவாக்கி உள்ளார்.

Fans Celebrate Vijay X Ajith in AI Viral Edit of Vijay and Ajit Reimagining the KH X RK Combo
Photo Credit:

அதாவது கமல்ஹாசனுக்கு பதிலாக அஜித் மற்றும் ரஜினிகாந்திற்கு பதிலாக விஜய் என ஏ.ஐ. மூலம் எடிட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஏ.ஐ வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு சம்பவம் தமிழ் சினிமா வரலாற்றில் நடந்தால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அள்ளுமே என்று பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: அதேபோல் மேலும் சிலரோ, இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் தமிழ் சினிமாவில் ரூபாய் 3000 கோடிகள் வசூலிக்கும் படமாக அது மாறும் என்று பதிவிட்டு வருகிறார்கள். ஏ.ஐ வீடியோவில் பார்ப்பதற்கே செம்மையாக இருக்கிறதே, இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் திரை தீ பிடிக்கும் மொமண்ட் உண்மையிலேயே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Fans Celebrate Vijay X Ajith in AI Viral Edit of Vijay and Ajit Reimagining the KH X RK Combo
Photo Credit:

விஜய் ஹீரோ - அஜித் வில்லன்: மேலும் ஒருவரோ அந்த ப்ரோமோவின் கடைசியில் கேட்பதைப் போல் யாரு ஹீரோ என்ற கேள்வியைக் கேட்க, ஒரு சிலர் அஜித் ஹீரோ, விஜய் வில்லன் என்று கமெண்ட் போட்டனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்களோ, விஜய் கதாநாயகனாக நடித்து அஜித் வில்லனாக நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பதிவிட்டு வருகிறார்கள். இது ஏ.ஐ வீடியோ என்று தெரிந்துமே ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கொடுத்துள்ள வரவேற்பைப் பார்த்தால், அஜித் மற்றும் விஜய் மனது வைத்தால் இருவரையும் வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாராவார்கள். அதே நேரத்தில் விஜய் சினிமாவில் இருந்தே விலகிவிட்டார். ஒருவேளை எதிர்காலத்தில் சினிமாவில் நடிக்கலாம் என்று தனது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று மனதை மாற்றிக் கொண்டால், கட்டாயம் அவர் அஜித் உடன் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X