மகனுக்கு அப்பா பெயரை வைத்த சிவகார்த்திகேயன்.. குட்டி மேளகாரர் என குட்டி எஸ்கேவை கொண்டாடும் ரசிகாஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் புகைப்படத்தை முதல் முறையாக இணையத்தில் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் குட்டி எஸ்கேவை கொண்டாடி வருகின்றனர்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இதய நோய்.. போராடும் 8 மாத பிஞ்சு குழந்தை.. அறுவைசிகிச்சைக்கு உதவுங்களேன்

வாக்குப்பதிவின் போது

வாக்குப்பதிவின் போது

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

மீண்டும் கர்ப்பம்?

மீண்டும் கர்ப்பம்?

நடிகர் சிவகார்த்திகேயனுடன் அவரது மனைவியும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களிப்பதற்காக சிவகார்த்திகேயனுடன் வந்த அவரது மனைவி ஆர்த்தியின் உடை, அவர் பவ்யமாக நடந்து வந்தது போன்றவற்றை பார்த்த ரசிகர்கள் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேட்டு வந்தனர்.

அப்பாவே மகனாக பிறந்திருப்பதாக

அப்பாவே மகனாக பிறந்திருப்பதாக

இந்நிலையில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 18 வருடங்களுக்கு பிறகு தனது அப்பாவே தனக்கு மகனாக பிறந்திருப்பதாக உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்

அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக...என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.. அம்மாவும் குழந்தையும் நலம் என்று பதிவிட்டிருந்தார்.

முதல்முறையாக போட்டோ வெளியீடு

முதல்முறையாக போட்டோ வெளியீடு

இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் தனது மகனின் போட்டோவை முதல் முறையாக இணையத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மகனுக்கு குகன் தாஸ் என பெயர்

மகனுக்கு குகன் தாஸ் என பெயர்

அதில் தனது மகனை அள்ளி கொஞ்சி முத்தமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் "குகன் தாஸ்" என பெயர் சூட்டியிருக்கிறோம் என பதிவிட்டிருந்தார்.

குட்டி மேளகாரர், நாதஸ்வர வித்துவான்

குட்டி மேளகாரர், நாதஸ்வர வித்துவான்

இதனை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு குட்டி மேளகாரர், நாதஸ்வர வித்துவான், குட்டி எஸ்கே என்றும் குட்டி எஸ்கேவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குகன்தாஸ் குட்டி மேளகாரர்

குகன்தாஸ் குட்டி மேளகாரர்

சிவகார்த்திகேயனின் மகன் குறித்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், குகன்தாஸ் குட்டி மேளகாரர் நாதஸ்வரம் வித்துவானுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

கலை பல கற்று.. வளம் பல பெற்று..

கலை பல கற்று.. வளம் பல பெற்று..

சிவகார்த்திகேயன் மகன் பெயரை பார்த்த இந்த ரசிகர், குகன் தாஸ் கலை பல கற்று, வளம் பல பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

'மகனே' அப்பாவை வளர்க்க போகிறார்!

'மகனே' அப்பாவை வளர்க்க போகிறார்!

மற்றொரு ரசிகரான இவர், 'குகன்தாஸ்'

இனிதிலும் இனிது அண்ணா
'அப்பா' மகனை வளர்த்தார்
இனி 'மகனே' அப்பாவை வளர்க்க போகிறார்!
எத்தனை 'கோடி' இன்பம்
உங்களின் 'முகமலர்ச்சியில்'
எங்களின் 'அகம்'மகிழ்கிறது
உங்கள் தன்னம்பிக்கை எங்களுக்கு தளராத தன்னம்பிக்கை அளிக்கிறது உங்கள் முயற்சி வெற்றிபெற ஊக்குவிப்போம் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இதயம் கனிந்த வாழ்த்துகள்

இதயம் கனிந்த வாழ்த்துகள்

மற்றொரு ரசிகரான இவர், அழகான பெயர் அண்ணா, குகன் சமத்துக்குட்டி எல்லா வழியிலும் உங்களை பெருமையடைய செய்வார். உங்கள் மகனுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள் அண்ணா. உங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். என் குடும்பத்திற்காக பிரார்த்திக்கும் போது உங்களின் குடும்பத்திற்காகவும் பிராத்திப்பேன்.. நான் எப்போதும் உங்களை வணங்குவேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X