Vijay: மண்டையில இருக்குற கொண்டையை பார்க்காம விட்டுட்டாரே.. விஜய் ஹேர்ஸ்டைலை கலாய்த்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங்குகள் சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தில் யோகிபாபுவின் போர்ஷன்களை வெங்கட்பிரபு எடுத்த நிலையில் தற்போது பாடல் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ளார். இதனிடையே அடுத்ததாக மாஸ்கோ செல்வதற்கான வேலைகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக முன்னதாக விஜய் அறிவித்துள்ளார். ஒருபுறம் தன்னுடைய அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிட்ட விஜய், அதன் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியையும் இன்றைய தினம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதையொட்டி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற ஷர்ட்டுடன் விஜய்யை பார்க்க முடிந்தது. அரசியல்வாதியாகவே மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவில் க்ளீன் ஷேவ் லுக்கில் விஜய்யை பார்க்க முடிந்தது.

Fans comments on Vijay s hairstyle in his video today

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் The greatest of all time படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியது. முதல்கட்டமாக பாடல் சூட்டிங்கை படக்குழுவினர் மேற்கொண்டனர். இது படத்தின் டைட்டில் பாடலாக அமைந்தது. தொடர்ந்து இந்தப் படத்தில் பிரபுதேவாவும் நடன இயக்குநராக செயல்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

The greatest of all time படம்: படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. முன்னதாக யோகிபாபுவின் போர்ஷன்களையும் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி முடித்த நிலையில் இன்றைய தினம் பாடல் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாஸ்கோ செல்ல படக்குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிவிவி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பை ரசிகர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வீடியோ வெளியிட்ட விஜய்: இந்தப் படங்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக முன்னதாக தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை மேற்கொண்ட விஜய் தெளிவுப்படுத்தியிருந்தார். ஒருபுறம் தன்னுடைய கட்சிப்பணிகளிலும் கவனம் செலுத்திவரும் விஜய் இன்றைய தினம் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கான செயலியை அறிமுகம் செய்துள்ளார். 2 கோடி உறுப்பினர்களை தன்னுடைய கட்சியில் இணைப்பதறற்கான முன் முயற்சியில் கட்சி தற்போது தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள விஜய், தான் உறுப்பினராக இணைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஹேர்ஸ்டைல்: இந்த வீடியோவில் அவரை பார்த்த ரசிகர்கள், தற்போதே அரசியல்வாதி லுக்கில் அவர் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வெள்ளை நிற ஷர்ட்டில் அவர் காணப்பட்டார். இந்த வீடியோவில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் அவரது ஹேர்ஸ்டைலையும் பார்க்க தவறவில்லை. முன்னதாக லியோ படத்தில் விஜய்யின் பார்த்திபன் கேரக்டர் ஹேர்ஸ்டைல் அதிகமான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது The greatest of all time படத்தில் மகன் கேரக்டருக்காக இந்த ஹேர்ஸ்டைலில் அவர் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஹேர்ஸ்டைல் அவருக்கு முற்றிலும் பொருந்தவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் கமெண்ட்: The greatest of all time படத்தில் விஜய்யின் மகன் கேரக்டருக்காக டீ ஏஜிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான லுக் டெஸ்ட்டில் முன்னதாக நடிகர் விஜய் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அவரது ஹேர்ஸ்டைல் இந்த லுக்கிற்கு எப்படி பொருந்தும் என்றும் டீ ஏஜிங் செய்யும்போது இது சரியாகுமா என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்க்கு மட்டும் ஏன் எந்த ஹேர்ஸ்டைலும் பொருந்த மாட்டேன் என்கிறது என்பது ரசிகர்களின் கேள்வியாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X