அர்த்தநாரீஸ்வரர் ஸ்டைல்.. பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ லுக்கில் இதை நோட் பண்ணீங்களா.. வங்கா குக்கிங்!

ஹைதராபாத்: அனிமல் படத்துக்குப் பிறகு பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார். பொங்கலுக்கு வரும் தி ராஜாசாப் படத்தின் டிரைலரை பார்த்து அப்செட்டாக இருந்த பிரபாஸ் ரசிகர்களை அப்படியே ஹைப்பாக்கும் அளவுக்கு ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆன ஃபர்ஸ்ட் லுக்கை ஸ்பிரிட் படக்குழு வெளியிட்டுள்ளது.

தீபிகா படுகோன் இந்த படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக அனிமல் படத்தில் செகண்ட் ஹாஃப்பில் வந்து ராஷ்மிகா மந்தனாவை விட தாராளம் காட்டி நடித்த திருப்தி டிம்ரி ஹீரோயினாக மாறியுள்ளார்.

Fans compares Prabhas s Spirit look with Arthanareeswarar ideology
Photo Credit:

முதுகில் காயங்களுடன் கையில் சரக்கு பாட்டிலுடன், வாயில் சிகரெட் வைத்துக் கொண்டு பிரபாஸ் இருக்க, அவருக்கு முன்னாள் ஹீரோயின் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரெண்டாகி வரும் நிலையில், அதனை அர்த்தநாரீஸ்வரர் உடன் பிரபாஸ் ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர்.

பொங்கலுக்கு பேய் படம்: இந்த ஆண்டு பொங்கலுக்கு (அங்கே சங்கராந்தி) மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் பேய் படமாக உருவாகியுள்ள தி ராஜாசாப் திரைப்படம். ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. தி ராஜாசாப் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் முதலையுடன் பிரபாஸ் சண்டை போடுவதை பார்த்துவிட்டு என்னடா கங்குவா வாடை அடிக்குதேன்னு கலாய்த்து வருகின்றனர். கடைசியில், பிரபாஸை இயக்குநரே ஜோக்கராக்கி விட்டார். போன வருஷம் பொங்கலுக்கு ராம் சரணுக்கு கேம் சேஞ்சர் படம் போல இந்த வருஷம் தி ராஜாசாப் ஆகாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Fans compares Prabhas s Spirit look with Arthanareeswarar ideology

ஆல்ஃபா மேல் 'ஸ்பிரிட்': ரன்பீர் கபூர் எல்லாம் தூசு என்பதை தனது பேக் ஷாட்டிலேயே பிரபாஸ் ஆஜானுபாகுவான உடம்புடன் காட்டி நிற்கும் போஸ்டர் வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது. சந்தீப் ரெட்டி வங்காவிடம் பாகுபலி பிரபாஸ் கிடைத்தால் என்ன பண்ணுவாரோ அதை பண்ணிவிட்டார் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அர்த்தநாரீஸ்வரர்: பிரபாஸின் பாதி முகம் மற்றும் ஹீரோயின் திருப்தி டிம்ரியின் பாதி முகம் தெரியும்படி போஸ்டர் டிசைன் செய்யப்பட்ட நிலையில், அர்த்தநாரீஸ்வரர் ஐடியாவா என்றும் சந்தீப் ரெட்டி வங்கா வெறித்தனமாக எதையோ குக் செய்து வருகிறார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன் முதலில் நடிக்கவிருந்த நிலையில், கண்டிப்பாக இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையான ஸ்பேஸ் ஹீரோயினுக்கும் இருக்கும் என்றும் அதனால் தான் ஃபர்ஸ்ட் லுக்கில் திருப்தி டிம்ரியும் இடம்பெற்றுள்ளார் என்று கூறுகின்றனர். ஆனால், கையில் சரக்கு பாட்டில், வாயில் சிகரெட் உள்ளிட்டவற்றை தவிர்த்து இருக்கலாம் என்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் அது தேவையே கிடையாது என்றும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X