வீர தீர சூரனை டென்ஷன் ஆக்கிய ரசிகர்கள்.. பாதுகாப்பே இல்லாத இடத்திற்கு சென்ற விக்ரம்.. நடந்தது என்ன?
சென்னை: விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரம் காளி கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் என தெரிவித்தனர். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இதனால், நடிகர் விக்ரம் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். ரசிகர்களிடம் அன்பாக பேசக்கூடிய விக்ரமையே ரசிகர்கள் கோபப்படுத்திய சம்பவம் இன்று அரங்கேறியிருக்கிறது.
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசத்தை காட்டக் கூடியவர் விக்ரம். இயக்குநர்கள் 100 %, எதிர்பார்ப்பை காட்டிலும் அந்த கதாப்பாத்திரத்திற்காக உடல் உழைப்பை செலுத்துவார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக கெட்டபுகளில் உடலை வறுத்தி நடிக்க கூடியவர் விக்ரம் என்ற Talk of the word இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு ஐ, அந்நியன், பீமா, ராவணன், தங்கலான் போன்ற படங்களே எடுத்துக்காட்டாக கூறலாம். பிறமொழி நடிகர்கள் கூட விக்ரமை பார்த்தால் வியந்து ரசிப்பார்கள்.ஈகோ இல்லாத மனிதர் என்றும் பெயர் எடுத்திருக்கிறார் விக்ரம்.

கடந்தாண்டு வெளியான தங்கலான் திரைப்படம் விக்ரம் கரியரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றே கூறலாம். ஆனால், அப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும், ரசிகர்களை கவரவில்லை. விக்ரம் நடிப்பு அசூரத்தனமாக இருந்ததாக தகவல் வெளியானது. தொடர் தோல்வியில் இருந்து மீள வீர தீர சூரனை கையில் எடுத்தார். விக்ரம். கடந்த 27ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. எல்லோரும் தூள், அருள், சாமி பட அளவிற்கு இருப்பதாக பாராட்டியுள்ளனர். காளி கதாப்பாத்திரத்தில் விக்ரம் சம்பவம் தரமா செய்திருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.
படத்தின் ரெஸ்பான்ஸை பார்த்து மலைத்து போன விக்ரம் வீர தீர சூரன் படம் திரையிடப்படும் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அவர்களை சந்தித்து பேசி உரையாடுகிறார். நேற்று மதுரை சென்ற அவருக்கு ரசிகர்கள் விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். படம் எப்படி இருக்கிறத என கேட்டதற்கு சம்பவம் தரமான சம்பவம் என கூச்சலிட்ட்னர். படம் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் விக்ரம் அடுத்ததாக இன்று திண்டுக்கல் விரைந்திருக்கிறார்.

ஆனால், திண்டுக்கல்லில் ரசிகர்கள் அவரை கோபப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்களின் அன்பு தொல்லையால் டென்ஷன் ஆன விக்ரம், அப்செட்டாகி பாதியிலேயே திரும்பி விட்டாரம். அவர் சென்ற காரில் ரசிகர்கள் ஏறிகொண்டு கூச்சலிட்டதாலும், அவரை பேசவிடாமல் அலப்பறை செய்துள்ளனர். இதனால், விக்ரம் பாதியிலேயே காரில் இருந்து கிளம்பிவிட்டார். மேலும் அங்கு முறையான பாதுகாப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நடிகர் ரசிகர்களை பார்க்க வருவது வாடிக்கையான ஒன்று தான் தகுந்த பாதுகாப்பு இல்லாமலா நடிகரை அழைப்பது என நெட்டிசன்கள் ரசிகர்களை திட்ட தொடங்கி விட்டனர். இதேபோன்று சென்னையிலும் சத்யம் திரையரங்கிற்கு வந்த விக்ரமை ரசிகர்கள் அவரை வட்டமடித்ததால் காரில் இருந்து தப்பி செல்லும் வீடியோக்கள் வைரலானது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது திண்டுக்கல்லில் அரங்கேறியிருப்பது விக்ரமிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். ரசிகர்களின் அன்பு, பாசம் எல்லாம் ஓகே ஆனால், அதற்காக இப்படியா செய்வது என கேட்க தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











