இப்போலாம் தனுஷ் படம் பார்க்க போனா ஏதோ எழவு வீட்டுல போய் உட்காருர மாதிரியே இருக்கு.. ரசிகர்கள் ஆதங்கம்

சென்னை: நடிகர் தனுஷ் தன்னை எப்படியாவது ஒரு நல்ல நடிகர் என காட்ட வேண்டும் என்று தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், ரசிகர்களால் தான் ரசித்து பார்க்க முடியவில்லை என அவரது ரசிகர்களே 'கர' படத்துக்குப் பிறகு கவலையுடன் ஏகப்பட்ட போஸ்ட்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

சினிமாவில் கமல்ஹாசன் பல நல்ல நல்ல படங்களை கொடுத்தாலும் தனது மொத்த நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தினாலும் ஸ்டைல் மட்டுமே காட்டிக் கொண்டு ரசிகர்களை கவர்ந்த ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் ஆனார்.

Fans dissappoints with Dhanush s choice of stories and Movies selection after Kara doomed

சியான் விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களின் நடிப்பை விட அஜித், விஜய் நடிப்பு குறைவு என்றாலும் ரசிகர்களை கவரும் யுக்தியை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டு பாக்ஸ் ஆபீஸ் ஜாம்பவான்களாக மாறினர். சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரும் அதே பாதையில் தான் பயணித்து வருகின்றனர்.

நல்லாவும் நடிக்கணும் ஜனங்களையும் கவர் பண்ணணும்: ஒரு சிறந்த நடிகர் யார் என்றால் சிறப்பாக நடிப்பவர் மட்டுமின்றி தனது நடிப்பால் ரசிகர்களை கடைசி வரை கட்டிப் போட்டு ஒட்டுமொத்த மக்களையும் தனது படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்க வைக்க வேண்டும். தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. காதல் கொண்டேன் படத்தை விட திருடா திருடி படம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. அந்த மன்மத ராசா பாடலுக்கு ஆட்டம் போடதவர்கள் யாருமே இல்லை. கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே திருச்சிற்றம்பலம் படம் பலரையும் கவரந்தது. அதன் பின்னர், அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஏதோ சோக கீதம் வாசிக்கும் படங்களாகவே உள்ளன.

எழவு வீடு: குடும்பஸ்தன், மாமன், தலைவன் தலைவி, தாய் கிழவி போன்ற கிராமத்துக் கதை படங்கள் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்ட காரணமே அந்த படங்களில் இருந்த சரியான நகைச்சுவை காட்சிகள் தான். நல்ல மெசேஜையும் பாடம் நடத்தாமல் அப்படியே ஜாலியாக ரசிகர்களுக்கு கொண்டு சென்று வெற்றிக் கண்டனம். ஆனால், தனுஷ் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்களில் சுவாரஸ்யம் குறைந்து வருகிறது என்றும் காமெடி காட்சிகளே இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. "இப்போ எல்லாம் தனுஷ் படம் பார்க்க தியேட்டருக்கு போனா, எதோ எழவு வீட்டுல போய் உட்காருற மாதிரி இருக்கு. நான் பார்த்து வளர்ந்த தனுஷ் இல்ல இது" என அவரது ரசிகர்களே அப்செட் ஆகி 'கர' படத்தை பார்த்து கடுப்பாகி உள்ளனர்.

ராஜ்குமார் பெரியசாமி காப்பாத்துவார்: விக்னேஷ் ராஜா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், அடுத்ததாக அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அந்த படத்தில் நடித்து வருகின்றனர். D55 படம் தனுஷுக்கு பெரிய படமாக மாறும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X