விஜய் மட்டும் ஒஸ்தி: எங்க ரஜினி, அஜித், தனுஷ் எல்லாம் தக்காளி தொக்கா?

By Siva

சென்னை: அது என்ன பாஜகவினர் விஜய்யின் படத்திற்கு மட்டும் இலவச விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

விஜய்யின் மெர்சல் படத்தை அடுத்து சர்கார் படத்திற்கும் பாஜக சார்பில் இலவச "விளம்பரம்" செய்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு வேறு படத்தை விமர்சித்துள்ளதால் ஆளும்கட்சி சார்பிலும் விளம்பரம் கிடைத்துவிட்டதாக மகிழ்கிறார்கள் ரசிகர்கள்.

இதை எல்லாம் பார்த்து பிற நடிகர்களின் ரசிகர்கள் லைட்டாக கவலை அடைந்துள்ளனர்.

 ஏன்?

ஏன்?

அது என்ன விஜய் படங்களுக்கு மட்டும் இப்படி பாஜக இலவச விளம்பரம் செய்கிறது. ஏன் எங்கள் தலைவர் ரஜினி, அஜித், தனுஷ், விக்ரம் ஆகியோரை எல்லாம் அவர்களுக்கு தெரியவில்லையா?. விஜய் படங்கள் போன்று அவர்களின் படங்களுக்கு ஏன் விளம்பரம் கொடுப்பது இல்லை என்று அந்த ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

 விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

விஜய்யின் சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் உள்ளது என்று கூறி பிரச்சனை செய்பவர்கள் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதில் கூடத்தான் தமிழக அரசியலில் நடந்த சில, பல விஷயங்களை கேலி செய்திருந்தார்கள். இந்த விஜய்யின் படத்தை எதிர்ப்பவர்கள் அடுத்த மாநிலத்தில் இருந்து வந்த அந்த விஜய்யின் படத்தை ஏன் எதிர்க்கவில்லை?. நோட்டா படத்தில் அரசியல்வாதிகளை எஃப் வார்த்தை சொல்லி விஜய் தேவரகொண்டா திட்டியபோது கூட யாருமே கண்டுகொள்ளவில்லையே.

ஆதரவு

விஜய்யின் படத்திற்கு கிளம்புவது எல்லாம் எதிர்ப்பு போன்று தெரியவில்லை. படத்தை ஓட வைக்க விளம்பரம் கொடுப்பதாகவே கருதப்படுகிறது. அதனால் தான் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களுக்கும் விளம்பரம் கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.

 2.0

2.0

ரஜினியின் 2.0 படம், பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே. ஆகிய படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களுக்கு விளம்பரம் கொடுத்து சூப்பர் ஹிட்டாக்கும் திட்டம் எதுவும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X