»   »  4 ஆயிரம் கிலோ எடை, 400 அடி நீளத்தில் கேக்: சல்மானுக்கு ரசிகர்கள் பர்த்டே பரிசு

4 ஆயிரம் கிலோ எடை, 400 அடி நீளத்தில் கேக்: சல்மானுக்கு ரசிகர்கள் பர்த்டே பரிசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூரத்: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 50வது பிறந்தநாளையொட்டி சூரத்தில் உள்ள அவரது ரசிகர்கள் 400 அடி நீளத்தில் 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சல்மானின் பிறந்தநாளை அவரை விட அவரது ரசிகர்கள் தான் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

400 அடி கேக்

சூரத்தில் உள்ள சல்மான் கான் ரசிகர்கள் தங்களின் ஹீரோவுக்காக 400 அடி நீளம், 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட கேக்கை தயாரித்துள்ளனர்.

மெகா கேக்

சூரத்தில் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள அந்த 400 அடி கேக் வெட்டப்பட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்போருக்கு கொடுக்கப்படுகிறது.

சாதனை

சல்மான் கானுக்காக செய்யப்பட்ட 400 அடி கேக் லிம்கா சாதனை புத்தகம் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

திருமணம்

திருமணம்

சல்மான் கான் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் திருமணத்தை பற்றி நினைக்கக் கூட இல்லை என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Salman Khan has turned 50 today. His fans in Surat have designed a 400 ft cake for him.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil