துபாயில் லிங்கா டிரைலர் வெளியிட்டு விட்டு சென்னை திரும்பினார் ரஜினி.. ரசிகர்கள் வரவேற்பு
துபாய்: லிங்கா படத்தின் டீசரை துபாயில் வெளியிட்டுவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
ரஜினி நடிக்கும் ‘லிங்கா' படம் விரைவில் திரைக்கு வர தயாராகி கொண்டு இருக்கிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். பெரும்பாலான படப்பிடிப்புகள் ஹைதராபாத் நகரில் நடந்தன.
பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி படத்தை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டீசர்
‘லிங்கா' படத்தின் 40 நொடி ‘டீசர்' கடந்த வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. வித்தியாசமான இரு வேடங்களில் ரஜினி இப்படத்தில் தோன்றி உள்ளார்.

துபாயிலும்
துபாயிலும் ‘டிரைலர்' வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு விட்டு இன்று சென்னை திரும்பினார்.

பயணிகள் உற்சாகம்
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் காலை 8.50 மணிக்கு அவர் விமான நிலையம் வந்தார். கருப்பு முழு கை டி-சர்ட், கருப்பு பேண்ட் அணிந்து வந்த ரஜினியை பார்த்த பயணிகள் உற்சாகத்தில் கைகளை உயர்த்தி 'தலைவா' என்று குரல் எழுப்பினர். அவர் சிரித்தபடியே கைகளை அசைத்தார்.

ரசிகர்கள் குவிந்தனர்
வெளிநாட்டில் இருந்து ரஜினி வருவதை அறிந்த ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர். அவரை வரவேற்க திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெள்ளத்தில் அவர் மிதந்தபடிதான் அவரால் செல்ல முடிந்தது. ரசிகர்களிடம் கை குலுக்கினார். புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். ரஜினியின் வருகையால் பன்னாட்டு விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











