அப்டேட்டே இல்லாமல் டிரெண்டிங்கா...ட்விட்டரை அலற விடும் சிம்பு ஃபேன்ஸ்
சென்னை : மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் விஜய், அஜித், ரஜினி போன்ற உச்ச நடிகர்களுக்கு தான் செய்து வந்தார்கள். அந்த வரிசையில் தற்போது சிம்பு என்ன செய்தாலும், சிம்பு பற்றிய தகவல் எதுவாக இருந்தாலும் அதை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு, கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து காணப்படும் சிம்புவின் ஃபஸ்ட்லுக் வெளியானதில் இருந்து, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பின் போது துவங்கியது, தற்போது வரை அடிக்கடி #SilambarasanTR என்ற ஹேஷ்டேகை ரசிகர்கள் அடிக்கடி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

டிரெண்டிங்கில் வெந்து தணிந்தது காடு
மாநாடு சமயத்தில் டிரெண்டிங் ஆக்கினர். சரி, படத்தை கொண்டாட அப்படி செய்கிறார்கள் என்றனர். அதற்கு பிறகும் சிலம்பரசன் ஹேஷ்டேகை டிரெண்டிங் ஆக்கினர். மாநாடு வெற்றியை கொண்டாட தான் இப்படி செய்கிறார்கள் என்றனர். அதற்கு பிறகும் சலம்பரசன் மட்டுமின்றி, #VendhuThanindhadhuKaadu ஹேஷ்டேகும் அவ்வப்போது டிரெண்டிங் ஆக்கப்பட்டது.

அப்டேட் தந்த தயாரிப்பாளர்
மாநாடு படத்தின் 50 வது நாள், சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என எல்லா சமயங்களிலும் இவற்றை டிரெண்டிங் ஆக்கினார்கள் சிம்பு ரசிகர்கள். இந்நிலையில் நேற்று வெந்து தணிந்தது காடு பற்றி தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பேசிய வீடியோ வெளியானது. இதில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால் கொரோனா சூழல் எப்படி உள்ளது என்பதை பொருத்து படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும். இன்னும் மும்பையில் எடுக்கப்பட வேண்டிய 7 நாட்கள் ஷுட்டிங் மட்டுமே மீதமுள்ளது.

அடத்த படமும் ஆரம்பமாகுது
வெந்து தணிந்தது காடு படத்தில் மொத்தம் 5 கெட்அப்களில் சிம்பு நடிக்கிறார். நீண்ட காலத்திற்கு பிறகு கெளதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ இணைந்துள்ளதால் பாடல்கள் வேற லெவலில் இருக்கும். இந்த படம் நிச்சயம் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு பூம்பராங்காக இருக்கும். வெந்து தணிந்தது காடு ஷுட்டிங் முடிந்த கையோடு, சிம்புவின் அடுத்த படமான கொரோனா குமாரு படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என்றும் கூறினார். இதனால் மீண்டும் #SilambarasanTR, #VendhuThanindhadhuKaadu ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகின.

டிரெண்டிங்கை அலற விடும் ரசிகர்கள்
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த இரு ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி உள்ளன. சிம்பு படம் பற்றிய அறிவிப்போ, வேறு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் மீண்டும் இவற்றை டிரெண்டிங் ஆக்கி உள்ளார்கள் சிம்பு ரசிகர்கள். இதில் சிம்புவின் பழைய போட்டோக்கள், வெந்து தணிந்தது காடு பற்றிய தகவல்கள் ஆகியனவே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அதோடு சிம்புவின் அடுத்த படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து இயக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விரைவில் ஒரு முக்கிய நாளில் இந்த படம் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். இதில் ரித்திகா சிங் ஹீரோயினாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











