Actor Vijay: தொடர்ந்து ரசிகர்களை சந்தித்துவரும் விஜய்.. இந்தமுறை கேரவன்மேல ஏறி போஸ்!
சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் சூழலில் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட சூழலில் தற்போது சென்னையில் மீண்டும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தினந்தோறும் ரசிகர்கள் விஜய்யின் சூட்டிங் நடக்கும் இடத்திலேயே சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.
படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் ராஜஸ்தானில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. அடுத்தடுத்து இலங்கை, இஸ்தான்புல் போன்ற இடங்களிலும் படத்தின் அடுத்தடுத்த கட்டங்களில் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கிவரும் சூழலில் படத்தில் அடுத்தடுத்து அதிகமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து வருகின்றனர். கலர்புல் காம்பினேஷனாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தை வசூல்ரீதியாக வெற்றிப்பெற செய்துள்ளனர் ரசிகர்கள். அடுத்ததாக விஜய்யின் 68வது படமாக உருவாகிவரும் The greatest of All time படத்தை அடுத்ததாக அதிகப்படியாக எதிர்பார்த்துள்ளனர். GOAT என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்கள் இந்த சூட்டிங் நீடிக்கவுள்ளது.
அடுத்தடுத்த கட்ட சூட்டிங்: அடுத்ததாக படக்குழுவினர் ராஜஸ்தான் செல்லவுள்ளனர். தொடர்ந்து இலங்கை, இஸ்தான்புல் போன்ற இடங்களிலும் அடுத்தடுத்த சூட்டிங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் சூட்டிங்கில் விஜய்யை மீசை, தாடியில்லாமல் பார்க்க முடிகிறது. படத்தில் அப்பா மற்றும் மகன் கெட்டப்புகளில் விஜய் நடித்து வருகிறார். டைம் டிராவலை மையமாக கொண்ட இந்த படத்தில் விஜய் அடுத்தடுத்த டைம் பிரேம்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் சூட்டிங்: தற்போது சென்னையில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்கள் இந்த சூட்டிங் நீடிக்கவுள்ள நிலையில் தினந்தோறும் சூட்டிங் ஸ்பாட்டில் ஏராளமான ரசிகர்கள் விஜய்யை சந்தித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் இரு வீடுகள் அமைக்கப்பட்டும் சாலைகளிலும் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி ஏராளமான ரசிகர்கள் காத்திருந்து விஜய்யை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து உற்சாகமடைந்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது விஜய் மீசை, தாடியில்லாமல் யுங் லுக்கில் காணப்படுகிறார்.
ரசிகர்களுடன் சந்திப்பு: அவரின் ஹேர்ஸ்டைலும் வித்தியாசமாக அமைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் ரசிகர்களுடன் இணைந்து விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. முன்தினம் ரசிகர்களை சந்தித்து கையசைத்து உற்சாகம் தெரிவித்த விஜய், தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பின்பு காரில் புறப்பட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை பார்ப்பதற்காக கேரவன் மீது ஏறிக் கொண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அவர்மீது பூக்களை தூவியும் தளபதி என்று கூப்பிட்டும் மகிழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications











