இளநீருடன் மாதம்பட்டி ரங்கராஜ்.. ஒரு வழியா அத பண்ணிட்டாரு.. கிண்டலடிக்கும் பேன்ஸ்!

சென்னை: ஜகமே தந்திரம் படத்தில் வரும், "என்ன வேணா நடக்கட்டும், நான் சந்தோஷமா இருப்பேன்" என்று, நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இன்ஸ்டாகிராமில் கூலாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ஃபேன்ஸ் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

சமையல் நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து பென்குயின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததுடன், சமையல் கலைஞராகவும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்து இருக்கும் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் நடுவராக உள்ளார்.

ஜாய் கிரிசில்டா புகார்: இந்நிலையில் கடந்த ஆண்டு ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருந்தபோது தன்னை விட்டு விலகியதாகவும் அவர் புகார் அளித்திருந்தார். இதற்கான ஆதாரங்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Madhampatty Rangaraj Joy Chrizildaa shruthi
Photo Credit:

அவர் தான் அப்பா: இந்த விவகாரம் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ், டி.என்.ஏ பரிசோதனையில் அது தன்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜாய் கிரிஸ்டா தனது மகன் ராகா ரங்கராஜை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டார், வாழ்நாள் முழுவதும் அவருடன் இருப்பேன் என்றும், மகனை ஒருபோதும் விட்டு செல்ல மாட்டேன் என்றும் கூறியதாக பதிவிட்டு இருந்தார்.

ஸ்ருதி ரங்கராஜ்: இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், திருப்பதியில் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, என் குடும்பத்தை மிரட்டுவதற்கோ அல்லது அவதூறு பரப்புவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொண்டாலும், என் குழந்தைகளையும் என் குடும்பத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன் என்று பதிவு செய்திருந்தார்.

கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்: இவ்வாறு இருவரும் இன்ஸ்டாகிராமில் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்த சர்ச்சைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது போல, மாதம்பட்டி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராமில் இளநீருடன் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், "ஒவ்வொரு இடமும் உன்னுள் ஏதோ ஒன்றை விட்டு செல்கிறது.ஒரு நிறம், ஒரு நறுமணம் அல்லது ஒரு அமைதியான வடிவம்... அதை உன்னுடன் எடுத்துச் செல்" என்ற தத்துவமார்ந்த வாசகத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும், நீண்ட நாட்களாக கமெண்ட் பாக்ஸை ஆஃப் செய்யாமல் இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது இதை ஆன் செய்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் ஒரு வழியா கமெண்ட் பாக்ஸை ஆன் செய்து விட்டீங்களே என்றும், தைரியம் வந்துவிட்டதா என அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X