கேஜிஎஃப் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணாதீங்க.. பிரபாஸ் சலார் கதை என்ன விவேகம் மாதிரி இருக்கு!

ஹைதராபாத்: கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் பல வருடங்களாக பிரபாஸின் சலார் படத்தை உருவாக்கி வந்த நிலையில், வரும் டிசம்பர் 22ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், வரும் டிசம்பர் 1ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அந்த படம் குறித்து பேசிய பிரசாந்த் நீல், கதை குறித்த முக்கிய ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.

Fans pouring troll meme after heard about Salaar story

கேஜிஎஃப் படத்தின் தொடர்ச்சியாகவே சலார் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பல்பு கொடுக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்திருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

கேஜிஎஃப் யூனிவர்ஸ் இல்லை: கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 என யஷ்ஷை வைத்து பிரசாந்த் நீல் இயக்கிய இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி கன்னட திரையுலகத்தையே 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் படத்தை கொடுக்க முடியும் என சாதித்துக் காட்டி உள்ளார். அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள சலார் படத்துக்கும் கேஜிஎஃப் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பிரசாந்த் நீல் தெளிவுப்படுத்தி உள்ளார்.

ஓவர் ஹைப் வேண்டாம்: ரசிகர்கள் பிரபாஸின் சலார் படமே யஷ்ஷின் கேஜிஎஃப் படத்தின் கதையோடு இணைந்த படம் தான் என்றும் கேமியோ ரோலில் யஷ் வருவார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உள்ள நிலையில், அது படத்துக்கு பெரிய பலவீனமாக மாறிவிடும் என்பதை புரிந்துக் கொண்ட பிரசாந்த் நீல் தற்போது இரண்டு படத்திற்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறியுள்ளார்.

நண்பர்களுக்குள்ளே சண்டை: மேலும், சலார் படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் யுத்தம் தான் இந்த படத்தின் கதை எனக் கூறியுள்ளார். இதை கேட்ட உடனே பல படங்கள் இதே போல வந்திருக்கே பாஸ் என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.

விவேகம் கதை: சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம், சமீபத்தில் துல்கர் நடித்து வெளியான கிங் ஆஃப் கோதா உள்ளிட்ட பல படங்கள் இதே கதை தானே என கலாய்த்து மீம் போட்டு வருகின்றனர். கதை எப்படி இருந்தா என்ன பாஸ் மேக்கிங் மற்றும் திரைக்கதை தரமா இருந்தா நிச்சயம் இண்டஸ்ட்ரி ஹிட் தான் என பிரபாஸ் ரசிகர்கள் நெகட்டிவ் கருத்துக்களை ஒதுக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X