ஜெயம் ரவியுடன்தான் மகன் இருக்கிறாரா?.. அப்போ ஆர்த்தி சொன்னது பொய்யா?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. இந்தச் சூழலில் அவர் தனது மனைவியை பிரிவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது.

ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடிக்க ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் பெரும்பாலும் அவை அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் அப்படி அவர் நடித்த படங்களும் ஹிட்டாக கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இருப்பினும் பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறக்கூடிய படத்துக்காக ஜெயம் ரவி காத்திருக்கவும் செய்தார்.

jayam ravi aarthi

பேராண்மை: அப்படி காத்திருந்தவருக்கு பேராண்மை படம் கிடைத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞனாக துருவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவி. படத்துக்கு தேவையான ஆக்‌ஷனை அளவாகவும், நடிப்பை சிறப்பாகவும் வழங்கிய ரவியை பார்த்து கோலிவுட் ஆச்சரியம்தான் பட்டது. இதனையடுத்து ஆக்‌ஷன் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த ரவி தனி ஒருவன் படத்தில் நடித்தார்.

மெகா ஹிட் தனி ஒருவன்: தனி ஒருவன் படம்தான் ஜெயம் ரவியை வைத்து ஜெயம் ராஜா இயக்கிய சொந்த கதை ஆகும். ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பக்கா ஆக்‌ஷன் த்ரில்லராகவும், சமூகத்துக்கு மெசேஜ் சொல்லும் வகையிலும் உருவான அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக அவர் சைரன் படத்தில் நடித்திருந்தார்.

மனைவி ஆர்த்தி: இதற்கிடையே ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் அன்யோன்யமாக வாழ்ந்துவந்த சூழலில்; இப்போது அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த சில காலமாகவே ஒரு தகவல் ஓடியது. ஆனால் கடந்த மாதம் ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி; அந்தப் படம் பற்றி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார். அதேசமயம் அவருடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கிவிட்டார் ஆர்த்தி.

விவாகரத்து: இதனால் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் விவாகரத்து பெறப்போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ஜெயம் ரவி. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் நெஞ்சம் கசந்த கடினமான முடிவு என்று உருக்கத்துடன் தெரிவித்திருந்தார். அதேசமயம் ரவியின் முடிவு தனக்கு தெரியாது என்று ஆர்த்தி தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் கேள்வி: இந்நிலையில் ஆர்த்திக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியதாகவும்; மகன்களுக்கு இந்த விஷயம் தெரியும், மகன்கள் தன்னுடன் தான் இருக்கிறார்கள் என்று ரவி இன்று காலை விளக்கமளித்திருந்தார். ரவியின் இந்த ஸ்டேட்மெண்ட்டை பார்த்த ரசிகர்கள்; ஆர்த்தி அளித்த விளக்கத்தில் தானும், தன்னுடைய பிள்ளைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். ஆனால் ரவியோ மகன்கள் தன்னுடன் இருப்பதாக கூறுகிறார். ஆக ஆர்த்தி பொய் சொல்லிவிட்டாரா என்று கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X