விக்ரமை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்.. உங்கள் அன்புக்கு நான் அடிமை.. நெகிழ்ச்சியான பதிவு!

சென்னை: சியான் விக்ரமிற்கு என்று ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. நடிகர் கமல் எப்படி தனது கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுகிறாரோ அதைப்போல விக்ரமும் தனது கதாபாத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவராக இருக்கிறார். வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்புக்காக தென்காசிக்கு சென்ற விக்ரமை அவரது ரசிகர் சூழ்ந்து கொண்டனர்.

தன்னுடைய கடுமையான உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்த விக்ரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். கோப்ரா படத்தில் 8 கெட்டப்புகளை போட்டு அசத்திய விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனை அனைவரின் கண்முன் காட்டி இருந்தார். ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரம் விக்ரமிற்கு பக்காவாக பொருத்தி இருந்தது. குறிப்பாக சோழா...சோழா... பாடலில் விக்ரமின் டான்ஸை பார்த்து மிரண்டு போகாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Fans surround actor Vikram on the set of Veera Dheera Sooran movie

உண்மைக்கதை: பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் படத் தயாரிப்புக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய 18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

வீர தீர சூரன்: தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'வீர தீர சூரன்' எனப் தலைப்பு வைக்கப்பட்டு, ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விக்ரம் பிறந்த நாளன்று படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதுடன், விக்ரம் மளிகைக் கடைக்காரராகத் தோன்றும் மாஸ் வீடியோ ஒன்றும் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்தது.

அன்புக்கு அடிமை: இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் திருத்தணியில் தொடங்கிய நிலையில், தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு நடப்பதை தெரிந்து கொண்ட, நடிகர் விக்ரமின் ரசிகர்கள் அப்பகுதியில் திரளாக திரண்டிருந்தனர். அங்கு விக்ரம் வந்ததும், அவரை சூழ்ந்து கொண்டு விக்ரம் ... விக்ரம் என அன்போடு அழைத்தனர். இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வீர தீர சூரன் படத்தை ரியா ஷிபு தயாரிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு பணிகளையும், பிரசன்னா கே.ஜி எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X