என்ன தல, இப்படி ஏமாத்திட்டியே தல: அஜீத் ரசிகர்கள் வருத்தம்
Recommended Video

சென்னை: அஜீத் தங்களை ஏமாற்றிவிட்டதாக அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜீத் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு எப்பொழுது துவங்குகிறது என்றே தெரியவில்லை. சிவா ட்விட்டர் பக்கமே வருவது இல்லை.
அவர் ஏதாவது அப்டேட் கொடுக்க மாட்டாரா என்று தல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அஜீத்
அஜீத் விசுவாசம் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது. அந்த புகைப்படங்களில் அஜீத் பெப்பர் முடி, சால்ட் தாடியுடன் இருந்தார்.
அதிர்ச்சி
அஜீத்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அவரின் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்து அவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.

ஃபிட்
விவேகம் படத்தில் அஜீத் செம ஃபிட்டாக இருந்தார். ஜிம்முக்கு சென்று தனது உடலை அவர் கும்மென்று ஆக்கியதை பார்த்து ரசிகர்கள் தல டா, முடியுமா என்று பெருமையாக கூறினார்கள்.

ஏன்?
இனிமேல் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன் என்றார் அஜீத். ஆனால் நேற்று வெளியான புகைப்படங்களில் அவர் வெயிட் போட்டு வேதாளம் அஜீத்தாக இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











