பாக்யராஜுக்கு நன்றிக்கடன் தீர்க்க ரஜினிக்கு செம சான்ஸ்.. சாந்தனுவுக்கு வாய்ப்பு கொடுப்பாரா சூப்பர் ஸ்டார்

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்ம மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இருந்த ஒரே கவலை என்னவென்றால்; தனது மகன் சாந்தனு சினிமவில் பெரிய அளவில் வர முடியவில்லையே என்பதுதான். இந்நிலையில் ரசிகர்களிடம் புதிய கோரிக்கை எழுந்திருக்கிறது.

இந்திய திரைத்துறையின் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்டவர் பாக்யராஜ். ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய அவர்; பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு காலையில் அவர் வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டார். அதை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த அவருக்கு; திடீரென நெஞ்சு வலித்திருக்கிறது. உடனடியாக பதறிப்போன குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

Fans Urge Rajinikanth to Cast Shanthanu in Dharman as a Tribute to Late K Bhagyaraj
Photo Credit:

உயிரிழந்த பாக்யராஜ்: ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு முழு அரசு மரியாதையுடன் பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்புவரை ஆரோக்கியமாக நடமாடிக்கொண்டிருந்தவர் இப்போது இல்லை என்பதை பலரும் இன்னமும் நம்ப மறுக்கிறார்கள்.

Also Read
காதலை அறிவித்த பவி டீச்சர் பிரிகிடா.. அந்த நடிகர்தான் காதலர்.. திருமணம் எப்போது தெரியுமா?
காதலை அறிவித்த பவி டீச்சர் பிரிகிடா.. அந்த நடிகர்தான் காதலர்.. திருமணம் எப்போது தெரியுமா?

உடைந்து போன குடும்பம்: பாக்யராஜின் இழப்பு அவரது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா உள்ளிட்டோரை எல்லாம் உள்ளபடியே சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மின் மயானத்துக்கு அவரது உடலை எடுத்து செல்லும்போது; அந்தப் பாதைக்கு கதறி அழுதபடியே சாந்தனு முத்தம் கொடுத்தது அங்கே இருப்பவர்களை உருகிப்போக செய்தது.

பாக்யராஜின் கவலை: பாக்யராஜை பொறுத்தவரை அவருக்கு ஒரே ஒரு கவலைதான் இருந்தது. அதாவது தன்னை போல் தன்னுடைய மகன் சாந்தனுவை சினிமாவில் பெரிய ஆளாக ஆக்க முடியவில்லையே என்பதுதான் அது. அதனை சாந்தனுவும் சில மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் புதிய கோரிக்கை ஒன்று சோஷியல் மீடியாக்களில் எழுந்திருக்கிறது.

என்ன கோரிக்கை?: அதாவது ரஜினிகாந்த்துக்காக பாக்யராஜ், 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். ஆனால் தன்னுடைய வேடிய மடிச்சுக் கட்டு படத்தில் கெஸ்ட் ரோல் செய்ய முடியுமா என ரஜினியிடம் பாக்யராஜ் கேட்டபோது; சூப்பர் ஸ்டார் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். பின்னர் ஒரு மேடையில் பேசிய அவர், 'பாக்யராஜ் என்னிடம் கேட்டபோது நான் செய்திருக்க வேண்டும்' என்று ஃபீல் செய்தார்.

நன்றிக்கடன் செய்ய வாய்ப்பு: அதுகுறித்து பாக்யராஜும் பின்னொரு நாளில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். தற்போது அந்த வீடியோவை மேற்கோள் காட்டி, 'பாக்யராஜுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடனாக நினைத்து அவரது மகன் சாந்தனுவுக்கு தர்மன் படத்தில் நல்ல ரோலை ரஜினிகாந்த் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் பாக்யராஜின் ஆன்மா குளிர்ந்துவிடும்' என்று கமெண்ட்ஸ் செய்து கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X