5 வருஷம் கழிச்சு வந்தாலும் அந்த அசத்தல் அப்படியே இருக்கே... சுரேஷ் கோபியை பாராட்டும் ரசிகர்கள்

By

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடித்துள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழில், முருகதாஸ் இயக்கிய தினா, ராஜ்கபூர் இயக்கிய சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி.

இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார். இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சுரேஷ் கோபி

சுரேஷ் கோபி

கடந்த ஐந்து வருடங்களாக, மலையாளப் படங்களில் நடித்திராத சுரேஷ்கோபி, டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதோடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள மலையாள படம், 'வரனே அவஷியமுண்டு'. அனுப் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ளார்.

நடிகை ஷோபனா

நடிகை ஷோபனா

இதில் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகை ஷோபனாவும் நடித்துள்ளார். மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி, மேஜர் ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. படத்தில், மேஜர் உன்னிகிருஷ்ணனாக சுரேஷ் கோபி நடித்துள்ளார்.

கோகுல் சுரேஷ்

கோகுல் சுரேஷ்

இதில் சுரேஷ் கோபியின் கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது ரீ என்ட்ரியை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். ஐந்து வருடம் ஆனாலும் அந்த அசத்தல் நடிப்பு அவரிடம் அப்படியே இருக்கு என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுரேஷ் கோபியின் மகனும் நடிகருமான கோகுல் சுரேஷ், பல்வேறு பேட்டிகளில், தனது தந்தை சுரேஷ் கோபி நடிக்காததால் ஏமாற்றம் அடைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

வெல்கம் பேக்

வெல்கம் பேக்

இந்நிலையில், இந்தப் பட ரிலீசை அடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் சுரேஷ் கோபியின் புகைப்படத்தைப் பதிவு செய்து, 'வெல்கம் பேக் எஸ்.ஜி' என்று குறிப்பிட்டிருந்தார், அவர் மகன் கோகுல் சுரேஷ். இந்தப் பதிவு வைரலானது. ஏராளமான ரசிகர்கள் இதை லைக் செய்துள்ளனர். அதோடு பலர் ஷேரும் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X