கூலி படத்துக்கு வந்த பாதி பேருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு.. ரசிகைகளே இப்படி கலாய்க்கிறாங்களே!
சென்னை: ரஜினிகாந்த் படம் ரொம்ப நல்லா இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் தலைவரை வைத்து தரமான சம்பவத்தை செய்திருப்பார் என்றெல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் அடித்துப் பிடித்துக் கொண்டு முதல் ஷோவுக்கு 1000 டிக்கெட் என்றாலும் வாங்கி வந்து படம் பார்த்துவிட்டு இப்போ பைத்தியம் பிடித்து விட்டது என தியேட்டரிலேயே ரசிகைகள் புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்கள் படங்கள் அனைத்தும் பான் இந்தியா சுவர் காரணமாக பலியாடாக மாறி வருவது தான் நிதர்சனம். ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் இதுதான் வெற்றி ஃபார்முலா என நினைத்து விட்டு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு நடிகரை படத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்து படம் எடுத்து பல்பு வாங்கி வருகிறார்.

வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் என ஏகப்பட்ட நட்சத்திரங்களை எடுத்துப் போட்டு படத்தை எடுத்த நிலையிலும், படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதே நிலைமை தான் தற்போது கூலி படத்துக்கும் வந்திர்ப்பதாக ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
குவியும் கூலி விமர்சனங்கள்: விமர்சகர்களின் விமர்சனங்கள், பப்ளிக் தியேட்டரில் கொடுக்கும் விமர்சனங்களை கூட புதிய படங்களுக்கு சினிமா பிரபலங்கள் நினைத்தால் அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க முடியும். ஆனால், ஒவ்வொருத்தனும் கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் போடும் விமர்சனங்களை எப்படி தடுப்பது என்கிற தலைவலி தான் தற்போது சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு வந்திருக்கிறது. லைகா நிறுவனத்தை இப்படித்தான் பல டாப் நடிகர்களும் காலி செய்த நிலையில், அடுத்து சன் பிக்சர்ஸ் வசமாக சிக்கியிருக்கிறது.
பைத்தியம் பிடித்திருக்கிறது: கூலி படத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டும் லோகேஷ் கனகராஜிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டும் இருக்கும் நிலையில், பெண்கள் இன்னொரு பக்கம் தியேட்டரிலேயே கூலி படத்தை பார்த்துவிட்டு, உங்களுக்கு ரஜினியை பிடிச்சிருக்கா?, நாகார்ஜுனாவை பிடிச்சிருக்கா? செளபின் சாஹீரை பிடிச்சிருக்கா? எனக் கேட்டுவிட்டு, படத்தை பார்த்த பாதி பேருக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு என பங்கம் பண்ணும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
முடிந்தவரை ரோஸ்ட்: கூலி படத்தை ஒவ்வொரு நாளும் தங்களுக்கு கிடைத்த டிக்கெட்டை வைத்துக் கொண்டு பார்க்கும் ரசிகர்கள் பலரும் பலவிதமாக ரோஸ்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இனிமேல் எல்சியூவில் படமெடுத்தாலும் அவரால் கைதி, விக்ரம் படங்களை போல நல்ல படங்களை கொடுக்க முடியாது என்றும் லியோவை தொடர்ந்து கூலி படத்தை காட்டு மொக்கையாக கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்கினாலும், சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை எடுத்தாலும் இதைவிட மட்டமான கதை மற்றும் திரைக்கதையை தான் அவர் எழுதுவார் என்றும் 2 வருடமாக படத்திற்காக உழைத்தேன் என்று கொடுத்த பில்டப் எல்லாம் புஷ் ஆகிவிட்டது என வச்சு விளாசி வருகின்றனர். ஜெயிலர் 2 படத்தில் நெல்சன் என்ன பண்ண காத்திருக்கிறாரோ தெரியவில்லை என்றும் ரசிகர்கள் இப்போவே அஞ்ச ஆரம்பித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











