என்னை மாதிரி ஒரு ‘நல்ல’ பாய்பிரண்ட் தேடு...: சுஹானாவுக்கு அட்வைஸ் பண்ணும் ஷாரூக்
மும்பை: ஹிந்தி சூப்பர்ஸ்டாரான ஷாரூக் தனது மகளுக்கு மட்டுமல்லாமல் அவள் வயதையொத்த அனைத்து சிறுமிகளுக்கும் 'தன்னைப் போன்றதொரு பாய்பிரண்டை தேடிக் கொள்ளுமாறு' அறிவுரை கூறியுள்ளார்.
தில்வாலே துல்ஹானியா லே ஜாயிங்கே, தில் தோ பாஹல் ஹே, கல் ஹோ நா ஹோ போன்ற சிறந்த காதல் படங்களில் நடித்தவரான ஷாரூக்கின் தற்போதைய ஹிட் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. படம் ஒருபுறம் வசூலை வாரிக் குவித்து, பழைய ரெக்கார்டுகளை உடைத்துக் கொண்டிருக்க சிறிய ஓய்வு நேரத்தை விரும்புகிறாராம் ஷாரூக்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷாரூக். அதில்...

ஓய்வு வேண்டும்...
எனது தோள், மனது மற்றும் இதயம் ஆகிய மூன்றிற்கும் இன்று ஓய்வு தர விரும்புகிறேன். இது மூன்றும் சமீப காலமாக மிகவும் உழைத்து விட்டது எனத் தெரிவித்துள்ளார்.

அன்பு மகளுக்கு...
மேலும், தனது மகள் சுஹானாவுக்கு ஒரு பொறுப்பான 47 வயது தந்தையாக அறிவுரை கூறும்போது, ‘ நான் காதலிக்க மிகவும் நல்ல மனிதன். மிகவும் டீசண்டான, அன்பான, படித்த, அக்கறையுள்ள பொறுப்பான மனிதன்.

கொஞ்சம் கோபம்...அதிக காதல்...
சில நேரங்களில் உண்டாகும் கோபத்தைத் தவிர நான் நல்லவன் தான். அதனாலேயே எனது மகளுக்கு என்னைப் போன்ற நல்ல மனிதனை தோழனாக தேர்வு செய்து கொள்ள அறிவுரை கூறுகிறேன்.

எல்லாருக்கும் தான் கேர்ள்ஸ்...
இது என் மகளுக்காக கூறும் அறிவுரை மட்டுமல்ல, அவள் வயதில் உள்ள அனைத்து சிறுமிகளுக்குமான எனது அறிவுரை' எனக் கூறியுள்ளார் ஷாரூக்.


Click it and Unblock the Notifications











