ப்பா.. ஃபயரா இருக்காரே பாலா.. இது சிக்ஸ் பேக் இல்லை.. அதுக்கும் மேல.. முரட்டு சம்பவமா இருக்கே!
சென்னை: பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ள ஃபயர் திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது. பிக் பாஸ் பிரபலங்களான சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளனர். காசி எனும் கதாபாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் மற்றும் காயத்ரி ஷான் என 4 நடிகைகளுடன் மனுஷன் சும்மா வாழ்ந்துள்ளார் என்று படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இதற்கெல்லாம் நான் பொறுப்பு கிடையாது என்றும் இயக்குநர் என்ன ஸ்க்ரிப்ட் எழுதினாரோ அதை தான் நான் செய்தேன். வாழச் சொன்னாரு வாழ்ந்தேன் என ஓபனாகவே பேசிவிட்டார் பாலாஜி முருகதாஸ்.

மெதுவா மெதுவா பாடலில் சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு பேன்ட் அணியாமல் ரச்சிதா மகாலட்சுமி இவருடன் போட்ட கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க வைத்துவிடும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டி எடுத்த செல்ஃபி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.
ஆரியுடன் மோதல்: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட பாலாஜி முருகதாஸை பார்த்தவுடனே அவருக்கு ஏகப்பட்ட பெண்கள் ரசிகைகளாக மாறினர். பிக் பாஸ் டைட்டிலை இவர் வெல்வாரா அல்லது ஆரி வெல்வாரா என்றே கடைசி வரை போட்டி சென்ற நிலையில், டைட்டிலை ஆரி தட்டிச் சென்றார். ஒவ்வொரு வாரமும் இவருக்கும் ஆரிக்கும் இடையே நடக்கும் மோதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஷிவானியுடன் காதல்: அதே போல ஷிவானி நாராயணன் உடன் பிக் பாஸ் பாலா செய்த ரொமான்ஸ் காட்சிகளும் ஷிவானியின் அம்மா வீட்டுக்கு வந்து அவரை திட்டியதையும் ரசிகர்கள் எப்பவுமே மறக்க மாட்டார்கள். நிகழ்ச்சி முடிந்த பின்னர், கவின் மற்றும் லாஸ்லியா பிரிந்தது போல இவர்கள் பிரியாமல் நண்பர்களாக மாறி பல பிறந்தநாள் விழாக்களிலும் ஒன்றாக பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

தடகள வீரர்: கடந்த 2023ம் ஆண்டு வெளியான வா வரலாம் வா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பாலாஜி முருகதாஸ் லீடு ரோலில் நடித்துள்ள ஃபயர் திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியாகிறது. மேலும், அருண் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள ரெட்ட தல படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்நிலையில், தடகள வீரர் போல இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சிக்ஸ் பேக்கை விட: சிக்ஸ் பேக்கை தாண்டி 8 பேக்ஸை காட்டும் அளவுக்கு தனது கட்டுமஸ்த்தான ஜிம் பாடியை மிரர் செல்ஃபியாக எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தையும் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க வேண்டும் என்றும் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கக் கூடிய திறமை இவருக்கு நிறையவே உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரச்சிதாவுடன் இவர் கவர்ச்சியாக நடனமாடிய மெதுவா மெதுமெதுவா பாடல் வீடியோ ஏற்கனவே தீயாக பரவி வரும் நிலையில், இந்த வாரம் ஃபயர் படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











