twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட் 2016... செம்ம்ம அடி வாங்கிய ஹீரோக்கள்!

    |

    சினிமா கேரியரில் ஏற்ற இறங்கங்கள் சகஜம் தான் என்றாலும் சில ஆட்களுக்கு அந்த ஆண்டே மோசமாக அமைந்து விடும். 2016 அப்படி அமைந்த சில ஹீரோக்கள். மினிம்ம் இரண்டு படங்கள் தந்த ஹீரோக்களைத்தான் லிஸ்ட் எடுத்துள்ளோம்.

    சித்தார்த்

    சித்தார்த்

    தீயா வேலை செய்யணும் குமாரு தவிர வேறு எதுவுமே சித்தார்த்தின் ஹிட் லிஸ்டில் இல்லை. சொந்தப் படம் எடுத்தாவது தன்னை நிரூபிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கினார். அதோடு சுந்தர்.சி கூட்டணியில் அரண்மனை 2 வும். முதலில் அரண்மனை 2 வெளியாகி மண்ணை கவ்வியது. ஒரு புதிய படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு போனால் அதே அரண்மனை படத்தை அதே நடிகர்களை வைத்து ரீமேக்கி இருந்தார் சுந்தர்.சி. சந்தானம் இல்லாமல் சூரியை சேர்த்திருந்த கூட்டணி மக்கள் நலக் கூட்டணி போல விளங்காமல் போனது. அடுத்து நம்பி தயாரித்து நடித்த ஜில் ஜங் ஜக் படத்துக்கு வித்தியாச வித்தியாசமாக புரமோஷன்களில் இறங்கினார். ரிசல்ட்? புரமோஷன் காசை கூட எடுக்கவில்லை. சமந்தாவும் நாகசைதன்யாவை கட்டிக்கொள்ள போகிறார். பாவம் சித்தார்த்தின் நிலைமையும் இப்போது ஜில் ஜங் ஜக் தான்.

    ஜீவா

    ஜீவா

    பட்ட காலிலே படும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஜீவா 'சார்'தான். சில வருடங்களாகவே ஹிட்டுக்கு அல்லாடும் ஜீவா இந்த ஆண்டு அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்தார். ரிலீஸ் மட்டுமே செய்தார். போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம் என்று மூன்றும் வித்தியாசமான படங்கள். ஆனால் கதை என்று ஒன்றை தேடினால் எதிலுமே காணோம். ஜென் நெக்ஸ்ட் என்று அடல்ட் காமெடி வரை இறங்கியும் வேலைக்கு ஆகவில்லை. அடுத்தடுத்த படங்கள் பாதிப்புக்குள்ளாகி பாதியில் நிற்கின்றன. கவலை வேண்டாம் ஜீவா...! தெம்போடு வாங்க!

    விக்ரம் பிரபு

    விக்ரம் பிரபு

    பிரபுவும் எத்தனையோ புரட்சி போராட்டம் நடத்தி பார்க்கிறார் விக்ரம் பிரபுவுக்கு ஒரு நல்லது நடப்பேனா என்கிறது. ஏகப்பட்ட பில்டப் தரப்பட்ட படங்கள் இரண்டுமே புட்டுக்கொண்டன. அதிலும் வாகா தந்த ஸ்வாஹாதான் ஜென்மத்துக்கும் பிரபு குடும்பத்தால் மறக்க முடியாது. காஷ்மீர் எல்லைக்கு போய் ஒரு மொக்கை படம் எடுத்துக்கொண்டு வந்து ரிலீஸ் செய்தார்கள். நல்ல கதையை வீர சிவாஜி என்று சூர மொக்கையாக்கினார்கள். நல்ல வேளை இதையெல்லாம் பார்க்க சிவாஜி இல்லை என்று ரசிகர்கள் ஆறுதல் மட்டும் அடைய முடிந்தது.

    ஜிவி.பிரகாஷ்

    ஜிவி.பிரகாஷ்

    யப்பா... கொஞ்ச நஞ்சமாடா ஆடினீங்க? என்று கவுண்டமணி கேட்பாரே அதுபோல ஆகி விட்டது ஜிவி.பிரகாஷ் நிலைமை. போன வருஷம் டார்லிங் பேயும், த்ரிஷா இல்லனா நயன்தாரா காமநெடியும் ஜிவி.பிரகாஷை திரும்பிப் பார்க்க வைத்தன. ஆனால் அதற்கு நேர் எதிராக இந்த ஆண்டு அமைந்துவிட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து ரிலீஸான பென்சில் கூர்மையே இல்லாமல் போனது. எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் வந்த இடமே தெரியாமல் காணாமல் போனது. தயாரிப்பாளர் சிவா செய்த புரமோஷன்களால் கடவுள் இருக்கான் குமாரு படம் மட்டும் வெளியில் தெரிந்தது. ஆனால் ரிசல்ட்? கடவுள் உன் பக்கம் இல்லை ஜிவிபி குமாரு! இனிமேலாவது பார்த்து நடந்துக்கோங்க பிரதர்!

    சசிகுமார்

    சசிகுமார்

    இந்த ஆண்டு சசி கோட்டாவில் நான்காவதாக சேரவிருக்கிறது இந்த வார ரிலீஸான பலே வெள்ளய தேவா. அப்ப மற்ற இரண்டும்? தாரை தப்பட்டையில் பாலாவுக்காக மாறியதும் சங்கை கடித்ததும் வீணாக போக, திரும்ப பழைய ரூட்டிலேயே இறங்கி நட்பு வசனம், விசுவாசம், காதல், ரத்தம் என்று இறங்கினார் சசி. விளைவு? ஒன்றுமில்லை. வெற்றிவேலும் கிடாரியும் லிஸ்டை கூட்டத்தான் உதவின. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம, வெட்கப்படற ஸீன் ஒண்ணுல்ல நடிக்கிறீங்கள்ல அதை நிறுத்துங்க பாஸ் முதல்ல...!

    தனுஷ்

    தனுஷ்

    சில மாதங்களாக சென்னையில் வெயில் பெரிதாக இல்லை. ஆனால் தனுஷ் வீடு மட்டும் அனலில் வெந்துகொண்டிருக்கிறது. காரணம் தனுஷின் ஸ்டொமக் ஃபயர். தான் அறிமுகப்படுத்திய ஆட்கள் எல்லாம் மேலே மேலே போய்க்கொண்டிருக்க எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி நடக்குது? என்ற புலம்பலும்தான். தொடரி கதையை கேட்ட சின்ன குழந்தை கூட, எப்படி பிரபு சாலமன் அங்கிள் இதெல்லாம் நடக்கும்? என்று கேள்வி கேட்டிருக்கும். ஆனால் தனுஷ் அதற்கு ஓகே சொல்ல அவரை வெச்சு செஞ்சிருந்தார் பிரபு சாலமன். அதற்கு அடுத்த வெளியீடு கொடி. சுமாராகத்தான் போனது. என்ன செய்வதென்று தெரியாமல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார் தனுஷ்.

    English summary
    Here is the list of flop heroes of Kollywood in the year 2016.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X