வீடு, ஜிம், ஷூட்டிங்... இது தான் விக்ரமின் தற்போதைய ‘முக்கோண வாழ்க்கை’

சென்னை: வீடு விட்டால் ஜிம், ஜிம் முடிந்தால் வீடு என ஓடுகிறதாம் விக்ரம் வாழ்க்கை. இடையில் கொஞ்சம் ஷங்கரின் ஷூட்டிங்.

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரமின் 'ஐ' படம் எப்போது வெளிவரும் என எல்லாரும் வழி மேல் விழி வைத்து காஅத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பர்ஸ்ட் லுக், டிரைய்லரைக் கூட கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார் ஷங்கர்.

இடையில் கொஞ்ச காலம் உடல் மெலிந்து விழாக்களில் தோன்றிய விக்ரமையும் இப்போது சுத்தமாக பார்க்க முடியவில்லை. என்னதான் நடக்கிறது என விசாரித்த போது கீழ்க்கண்ட விஷயங்கள் தெரிய வந்தது.

இரண்டு மாதங்களாக...

இரண்டு மாதங்களாக...

கிட்டத்தட்ட விக்ரமை பொது விழாக்களில் பார்த்தே இரண்டு மாதங்களுக்கும் மேலாகி விட்டது. சமீபத்தில் நடை பெற்ற ஜி.வி.பிரகாஷ் கல்யாணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. போனில் வாழ்த்து தெரிவித்ததோடு முடித்துக் கொண்டார்.

தாத்தாவாக வரும் விக்ரம்...

தாத்தாவாக வரும் விக்ரம்...

காரணம் ‘ஐ' படத்தில் 85 வயது தாத்தா வேடத்தில் வரும் விக்ரம், முதலில் மெலிந்து கண்களுக்கு கீழே சுருக்கங்கள் விழ வைத்தார்.

வெயிட்டை ஏத்தும் விக்ரம்...

வெயிட்டை ஏத்தும் விக்ரம்...

தற்போது ஷங்கர் கொஞ்சம் வெயிட் ஏத்தச் சொல்லி உத்தரவு போட, அதற்காக ஜிம்முக்கும் வீட்டிற்குமாய் அலைந்து கொண்டிருக்கிறாராம் விக்ரம்.

ஷங்கரின் உத்தரவு...

ஷங்கரின் உத்தரவு...

மேலும், இந்த உடலமைப்போடு எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கோ, குடும்ப நிகழ்ச்சிக்கோ செல்ல வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளதாம் ஷங்கரிடமிருந்து. அதனால் தான் பொது நிகழ்ச்சிகளில் விக்ரம் பங்கேற்பதில்லை என உறுதியோடு இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X