நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை திடீர் சோதனையா?. தீயாய் பரவிய தகவல்.. நடந்தது என்ன?

சென்னை: நடிகர் அஜித் வீட்டில் சோதனை என தகவல் பரவிய நிலையில் வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்துக்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது வலிமை படப்பிடிப்பு பணியில் பிஸியாக உள்ளார் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித் வீட்டிற்கு இன்று வனத்துறையினர் திடீரென சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு நாளைக்கு 4 எலிகள்

ஒரு நாளைக்கு 4 எலிகள்

நடிகர் அஜித்தின், பிஆர்ஓவான சுரேஷ் சந்திராவும் அவரது உதவியாளரும் தங்களின் வீட்டில் 3 அடி நீள மலைப்பாம்பு ஒன்றை வளர்ப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் அந்த மலைப்பாம்புக்கு நாள் ஒன்றுக்கு 4 எலிகளை உணவாக கொடுப்பதாகவும் செய்தி வெளியானது.

அஜித் வீட்டில் ரெய்டு

அஜித் வீட்டில் ரெய்டு

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சுரேஷ் சந்திரா வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால் அவர் பனையூர் வீட்டிற்கு சென்றதால் அவரைது முகவரியை பெறுவதற்காக சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு சென்றனர்.

முகவரி பெற

முகவரி பெற

அங்கு சுரேஷ் சந்திராவின் வீட்டு முகவரியை தெரிந்து கொண்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதாகவும், அவர் பாம்பு வளர்த்து வருவது உண்மையா என்பதைக் கண்டுபிடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

பரபரப்பு

பரபரப்பு

இதனிடையே நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொய்யான தகவல்

பொய்யான தகவல்

இந்நிலையில் அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக கூறப்படும் தகவலை வனத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அந்த தகவல் பொய்யானது என்றும், அவரது மேனேஜர் மற்றும் பிஆர்ஓவான சுரேஷ் சந்திராவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் இந்த சம்பவத்தில் அஜித்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். அவரது பிஆர்ஒ சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர் மலைப்பாம்பு வளர்த்தது உறுதியானால் அவர்கள் மீது வனவிலங்கு தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை என்று பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தன்னுடைய வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X