மே 1 பிறந்த நாள்.. இப்பவே ஆரம்பமான வாழ்த்துக்களும் சண்டைகளும்.. டிரெண்டாகும் #ForeverThalaAJITH
சென்னை: தல அஜித்தின் பிறந்த நாள் மே 1ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் #ForeverThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
நண்பர் அஜித் என மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய பிறகு, அஜித் - விஜய் சண்டை நின்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது, மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, அநாகரிகமான ஹாஷ்டேக்குகளுடன் சண்டை எல்லை மீறி போய்க் கொண்டு இருக்கிறது.

தல தளபதி நட்பு
நடிகர் அஜித் மற்றும் விஜய் இடையே நீண்ட காலமாக நல்ல நட்பு நிலவி வருகிறது. படங்களில் போட்டி இருந்தாலும், ரியல் லைஃபில் இருவருக்கும் இடையே எந்தவொரு போட்டியோ பொறாமையோ இருந்ததே இல்லை. ஜேசன் சஞ்சய் லாக்டவுன் காரணத்தால் நாடு திரும்ப முடியாத சூழலில் நடிகர் அஜித், விஜய்க்கு போன் செய்து விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின.

ரசிகர்கள் சண்டை
நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 12 நாட்கள் இருக்கின்ற நிலையில், இன்றே #ForeverThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள், தல அஜித் குறித்தும், அவர் நடித்த படங்கள், அவர் பற்றி தெரியாத விஷயங்கள் என பலவற்றை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தல பர்த்டே
வரும் மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா லாக் டவுனால், தியேட்டர்களில் அஜித் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. ட்விட்டரில் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்ட் செய்வார்கள். இந்நிலையில், தற்போதே அந்த வேலையை அஜித் ரசிகர்கள் தொடங்கி உள்ளனர்.
டிரெண்டாகும் ஹாஷ்டேக்
நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 12 நாட்கள் இருக்கின்ற நிலையில், இன்றே #ForeverThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள், தல அஜித் குறித்தும், அவர் நடித்த படங்கள், அவர் பற்றி தெரியாத விஷயங்கள் என பலவற்றை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இத்தனை திறமைகள்
நடிகர், கார் ரேஸர், பைக் ரேஸர், புகைப்படக் கலைஞர், சமையல் வல்லுநர், ஹெலிகாப்டர் பைலட் டிரைனர், கல்லூரி பேராசிரியர், மெக்கானிக், கார்மெண்ட் முதலாளி என பல திறமைகள் கொண்டவர் தல அஜித் என அவரது பன்முகத் தன்மைகளை பட்டியலிட்டு குறிப்பிட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

விடா முயற்சி நாயகன்
தோல்வியை கண்டு துவண்டு போகாமல், அடுத்ததாக வர வேண்டிய வெற்றிக்காக அயராது உழைக்கும் ஆற்றல் கொண்டவர் தல அஜித். விவேகம் படத்தில் நடிகர் அஜித் சொல்லும் பவர் ஃபுல் வசனமான நெவர் எவர் கிவ் அப் என்ற வசனம் அஜித் ரசிகர்களுக்கு தாரக மந்திரமாக மாறி இருக்கிறது.
ஆணழகன்
அல்டிமேட் ஸ்டார் என்றும், தல என்றும் போற்றப்படும் நடிகர் அஜித் ஆணழகன் என்பதை திரைத்துறையில் இருக்கும் பல முன்னணி நடிகைகளும் பல முறை கூறியுள்ளனர். பெண்கள் பின்னால் சுற்றாமல், பெண்ணே சுற்றும் பேரழகன் அஜித்தின் 49வது பிறந்த நாள் விழாவை வேற லெவலில் தெறிக்க விடப்போவதாகவும், இது சும்மா ஆரம்பம் தான் என கூறிகின்றனர் அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











