ரவி மோகனுக்கு 4 ஹீரோயின்களா?.. டிக்கிலோனா இயக்குநருடன் கூட்டணி.. தயாரிப்பாளாக வெற்றி காண்பாரா?

சென்னை: நடிகர் ரவி மோகன் படங்களில் வழக்கமாகவே ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக அவர் நடித்து வரும் ஜீனி படத்தில் அவருக்கு 3 ஹீரோயின்கள். இந்நிலையில், தனது முதல் தயாரிப்பு படத்தில் ரவி மோகனுக்கு மொத்தம் 4 ஹீரோயின்கள் என தகவல்கள் கசிந்துள்ளன.

மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் பழகி வரும் ரவி மோகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கராத்தே பாபு, பராசக்தி, ஜீனி என செம லைன் அப் வைத்திருக்கிறார்.

Four Heroines for Ravi Mohan s next movie with Karthik Yogi under his own banner
Photo Credit:

ரவி மோகன் ஸ்டூடியோஸை ஆரம்பித்துள்ள நிலையில், ப்ரோ கோட் (Bro Code) எனும் டைட்டிலில் தொடங்கும் படத்தில் ரவி மோகன் நடிக்கப் போகிறார். அந்த படத்தை டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கம்பேக் கொடுப்பாரா: ரவி மோகனுக்கு இருக்கிற அழகுக்கும் திறமைக்கும் பாலிவுட்டுக்கு சென்று நடித்தால் கூட அவருக்கு மிகப்பெரிய சம்பளம் கிடைக்கும். ஆனால், தமிழில் அவர் சோலோ ஹீரோவாக நடித்து வரும் படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி ரவி மோகனின் மார்க்கெட்டை மொத்தமாக காலி செய்து விட்டன. ஆனாலும், புதிய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தொடர்ந்து ரவி மோகனுக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

Four Heroines for Ravi Mohan s next movie with Karthik Yogi under his own banner
Photo Credit:

மாமியார் தயவு தேவையில்லை: ரவி மோகன் தனது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதாவின் தயாரிப்பு நிறுவனத்தில் தான் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ரவி மோகன் நடித்த எந்தவொரு படமும் ஓடவில்லை என்றும் 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், யாருடைய தயவும் வேண்டாம் என்கிற முடிவில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் ரவி மோகன் தொடங்கி உள்ளார்.

டிக்கிலோனா இயக்குநருடன் இணைந்து: சந்தானத்தை வைத்து டிக்கிலோனா படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் ரவி மோகன் அடுத்து நடிக்கப் போகிறார் என்கின்றனர். அந்த படத்தில் தான் அவருக்கு அதிகபட்சமாக 4 ஹீரோயின்கள் ஜோடிகளாக நடிக்கப் போகிறார்கள் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய விரைவில் அந்த 4 ஹீரோயின்கள் யார் யார் என்கிற அப்டேட் வெளியாகும் என்கின்றனர்.

கயாடு லோஹர் கன்ஃபார்ம்? கண்டிப்பாக கயாடு லோஹர் ஒரு ஹீரோயினாக ரவி மோகன் படத்தில் இணைந்து விடுவாரே என நெட்டிசன்களே கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கயாடு லோஹர் நடித்து வரும் நிலையில், ரவி மோகன் படத்தில் அவர் இணையவும் நிறைய சான்ஸ் உள்ளதாம்.

எஸ்.ஜே. சூர்யா: பிரதீப் ரக்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள எல்ஐகே படத்தைத் தொடர்ந்து ரவி மோகன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கராத்தே பாபு, ஜீனி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த படம் ரவி மோகனுக்கு பெரிய படமாக அமையும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X