பிரெஞ்சு படத்தில் ரஜினி பைட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா ஹிட் படமான முத்துவில் இடம்பெற்றுள்ள2 நிமிட சண்டைக் காட்சி பிரெஞ்சு படம் ஒன்றில் அப்படியே சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த 1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. தமிழகத்தில் மட்டும் அல்லாதுஉலகம் முழுவதும் பெரும் வசூலை வாரிக் கொட்டிய படம். ஜப்பானில் டான்ஸிங்மகாராஜா என்ற பெயரில் முத்து மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி பெரும்வசூலை அள்ளியது.இப்படத்திற்குப் பிறகு தான் ஜப்பானில் ரஜினிக்கு பெரும் ரசிகர் பட்டாளம்ஏற்பட்டது.தமிழ் படம் ஒன்று வெளிநாட்டில் பெரும் வசூலை வாரியது அதுவே முதல் முறைஎன்பதால் முத்து படத்திற்குப் புதிய பெருமை கிடைத்தது. இப்போது இன்னொருபெருமை முத்துவுக்குக் கிடைத்துள்ளது.பிரெஞ்சு மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள பிரெட்டே மொய் டாமெயின் என்ற படத்தில் முத்துபடத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சி ஒன்று அப்படியே சேர்க்கப்பட்டுள்ளது.பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ஏலியன் சஃபெத் என்பவர் இயக்கியுள்ள அந்தப்படத்தில் முத்து பட சண்டைக் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.இந்தக் காட்சியை சேர்ப்பதற்காக முத்து படத் தயாரிப்பாளரான கவிதாலயாநிறுவனத்திடம் ஏலியன் தொடர்பு கொண்டு சண்டைக் காட்சியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரினாராம். அதற்கு கவிதாலாய நிறுவனத்தினர் சந்தோஷமாகஒப்புதல் அளித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து அந்த சண்டைக் காட்சி படத்தில் சேர்க்கப்பட்டது.சுமார் 2 நிமிடம் ஓடும் இந்த சண்டைக் காட்சியை பிரெஞ்சு படத்தின் நாயகி டிவியில்ரசித்துப் பார்ப்பது போலவும், கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது என்று அவர்வசனம் பேசுவது போலவும் காட்சி அமைந்துள்ளதாம்.ரஜினியும், வில்லன் பொன்னம்பலமும் மோதும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி இது.இந்த பிரெஞ்சு படம் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும்திரையிடப்பட்டுள்ளது. நவம்பரில் இந்தப் படம் ரீலீஸ் ஆகப் போகிறதாம்.

By Staff

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா ஹிட் படமான முத்துவில் இடம்பெற்றுள்ள2 நிமிட சண்டைக் காட்சி பிரெஞ்சு படம் ஒன்றில் அப்படியே சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. தமிழகத்தில் மட்டும் அல்லாதுஉலகம் முழுவதும் பெரும் வசூலை வாரிக் கொட்டிய படம். ஜப்பானில் டான்ஸிங்மகாராஜா என்ற பெயரில் முத்து மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி பெரும்வசூலை அள்ளியது.

இப்படத்திற்குப் பிறகு தான் ஜப்பானில் ரஜினிக்கு பெரும் ரசிகர் பட்டாளம்ஏற்பட்டது.

தமிழ் படம் ஒன்று வெளிநாட்டில் பெரும் வசூலை வாரியது அதுவே முதல் முறைஎன்பதால் முத்து படத்திற்குப் புதிய பெருமை கிடைத்தது. இப்போது இன்னொருபெருமை முத்துவுக்குக் கிடைத்துள்ளது.


பிரெஞ்சு மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள பிரெட்டே மொய் டாமெயின் என்ற படத்தில் முத்துபடத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சி ஒன்று அப்படியே சேர்க்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ஏலியன் சஃபெத் என்பவர் இயக்கியுள்ள அந்தப்படத்தில் முத்து பட சண்டைக் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சியை சேர்ப்பதற்காக முத்து படத் தயாரிப்பாளரான கவிதாலயாநிறுவனத்திடம் ஏலியன் தொடர்பு கொண்டு சண்டைக் காட்சியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரினாராம். அதற்கு கவிதாலாய நிறுவனத்தினர் சந்தோஷமாகஒப்புதல் அளித்துள்ளனர்.


இதைத் தொடர்ந்து அந்த சண்டைக் காட்சி படத்தில் சேர்க்கப்பட்டது.

சுமார் 2 நிமிடம் ஓடும் இந்த சண்டைக் காட்சியை பிரெஞ்சு படத்தின் நாயகி டிவியில்ரசித்துப் பார்ப்பது போலவும், கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது என்று அவர்வசனம் பேசுவது போலவும் காட்சி அமைந்துள்ளதாம்.


ரஜினியும், வில்லன் பொன்னம்பலமும் மோதும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி இது.இந்த பிரெஞ்சு படம் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும்திரையிடப்பட்டுள்ளது. நவம்பரில் இந்தப் படம் ரீலீஸ் ஆகப் போகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X