Vishal: திருமணத்துக்கு மாப்பிள்ளை விஷால் பக்காவா ரெடியாகிட்டாரு போல.. தலைகீழா நின்னு என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பளராகவும் உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது மத கஜ ராஜா. இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல், கடந்த ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு வெளியாகியும் பெரும் வெற்றிப் படமாகவும் உருவெடுத்தது.
இந்த படத்தின் புரோமோசனில் கலந்து கொண்ட போது விஷால் கைகள் நடுங்கின. மேலும் அவரால் சரியாக பேசவும் முடியவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான வைரஸ் காய்ச்சல் தான் விஷாலின் இப்படியான உடல் நிலைக்கு காரணம் என்று மருத்துவ அறிக்கைகள் வெளியானது. விஷால் இவ்வளவு மோசமான உடல்நிலையில் இருப்பதைப் பார்த்த அவரது நெருங்கிய நண்பர் ஆர்யா, தனது படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு, உடனே விஷால் உடல்நிலையை சரி செய்வதில் கவனம் செலுத்தினார் என்று எல்லாம் தகவல்கள் வெளியானது.

விஷால் - சாய் தன்ஷிகா: கடந்த ஆண்டு விஷால் தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மேலும் நடிகை சாய் தன்ஷிகாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்தார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் எல்லாம் நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடம் திறந்ததும் விஷால் திருமணம் செய்யவுள்ளார். இப்படி இருக்கையில் விஷால் தற்போது மகுடம் படத்தை இயக்கி நடித்துக் கொண்டு இருக்கிறார். அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு ஹிப் -ஹாப் ஆதி இசையமைக்கிறார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த விஷால் அதன் பின்னர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஃபிட்னஸ்: இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது தனது முகநூல் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஒரு இரும்பு வளையத்தில் தனது இரண்டு கால்களையும் வைத்து வணங்கியபடி அமர்ந்திருக்கிறார். அதேபோல் மற்றொரு பெட்டிக்குள் தலைகீழாக நிற்பது போல உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

பாசிடிவ்: இந்த புகைப்படங்களை பகிர்ந்த அவர், " குட் மார்னிங் டார்லிங்ஸ். தலை முதல் கால் வரையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்க முடியுமானால், உலகில் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் நாம் உலகத்தின் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை அது கொடுக்கும். நம்மைச் சுற்றி எத்தனை கெடுதல்கள் நடந்தாலும் நாம் மட்டும் மிகவும் பாசிட்டிவாகவே இருப்பது போன்ற எண்ணம் உருவாகும். எனது ஆரோக்யம் மற்றும் உடற்பயிற்சியில் எனக்கு மற்றொரு உலகத்தை காட்டிய சாய் தன்ஷிகா மற்றும் யோகினி என இருவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்த பலரும், விஷால் திருமணத்திற்கு ரெடி ஆகிட்டாரு போல என்று விளையாட்டாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











