Happy Raj Day 2 Box Office - ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் இரண்டாவது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸில் செம ட்விஸ்ட்

சென்னை: இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ் இப்போது ஹேப்பி ராஜ் படத்தி நடித்திருக்கிறார். இதனை மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் இயக்க; ஜார்ஜ் மரியான், கௌரி பிரியா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது நேற்று முன்தினம் தியேட்டர்களில் ரிலீஸானது. படத்துக்கு ஓரளவுக்கு மட்டுமே முதல் நாளில் வசூல் கிடைத்தது. இந்நிலையில் அதன் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி; எக்கச்சக்க ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். இரண்டு முறை தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இதற்கிடையே ஹீரோவாகும் ஆசை வந்துவிட; அதனை செயல்படுத்தினார். பாலா, சசி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட சீனியர் இயக்குநர்கள் தொடங்கி புதிய இயக்குநர்கள்வரை சேர்ந்து படங்கள் செய்துவிட்டார். அவற்றில் சில படங்கள் மட்டுமே ஜிவிக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

G V Prakash Kumar s Happy Raj Surprises on Day 2 Box Office Jumps After Weak Start
Photo Credit:

ஒரு ஹிட் தேவை: அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. எனவே ஒரு ஹீரோவாக எப்படியாவது பெரிய ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என உழைத்துவருகிறார். குறிப்பாக அறிமுக இயக்குநர்களுடன் அதிகம் கூட்டணி வைக்கிறார். அவர்களும் வித்தியாசமான கதைக்களத்தோடு வந்தாலும்; மேக்கிங்கில் சொதப்பிவிடுகிறார்கள். அதனால் ஒன்று படம் தோல்வியடைகிறது இல்லையென்றால் சுமாரான வரவேற்பை மட்டுமே பெறுகிறது.

ஹேப்பி ராஜ்: அவர் இப்போது மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஹேப்பி ராஜ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். உருவ கேலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அவருடன்; ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர், க்ளிம்ப்ஸ் எல்லாம் ஓரளவுக்கு ஹைப்பை ஏற்றியிருந்தன. அந்த ஹைப்போடு தியேட்டர்களில் நேற்று முன்தினம் படமானது ரிலீஸானது. ரசிகர்களும் ஆவலோடு இந்தப் படத்தை பார்க்க சென்றிருந்தார்கள்.

Also Read
மதுரையில் பிரசாரத்தை தொடங்கிய சுந்தர் C.. அரசனை நம்பி புருஷனை கை விட்டுட்டாரா? கலாய்க்கும் ரசிகர்கள்
மதுரையில் பிரசாரத்தை தொடங்கிய சுந்தர் C.. அரசனை நம்பி புருஷனை கை விட்டுட்டாரா? கலாய்க்கும் ரசிகர்கள்

சுமார் வரவேற்புதான்: ஆனால் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. படத்தின் மைய கதை நன்றாக இருந்தாலும் அதை ப்ரெசண்ட் செய்த விதத்தில் இயக்குநர் தோற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முக்கியமாக அந்த கதையை விட்டுவிட்டு தேவையில்லாத வேறு விஷயங்களை திரைக்கதையில் நீண்ட நேரம் வைத்துவிட்டதன் காரணமாகவும் ரசிகர்கள் படத்தை கொண்டாட மறுத்துவிட்டார்கள். விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கும் ஹேப்பி ராஜ்; வசூலிலாவது ஓரளவுக்கு வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

வசூல் நிலவரம் என்ன?: இந்நிலையில் அந்தப் படத்தின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் வெறும் 65 லட்சம் ரூபாய்தான் வசூல் செய்திருந்தது. ஆனால் அந்த தளத்தின் தகவல்படி இரண்டாவது நாளில் படத்துக்கு வசூல் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. அதாவது நேற்று இப்படமானது ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். முதல் நாளைவிட இரண்டாவது நாள் வசூல் அதிகரித்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறதாம். இது இனி வரும் நாட்களிலும் தொடர வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X