ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் ‘காதலைத் தேடி நித்யா நந்தா’!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காதலைத் தேடி நித்யா நந்தா’ எனப் பெயரிட்டுள்ளது.

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'காதலைத் தேடி நித்யா நந்தா' எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடி படமான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் நல்ல வசூலைத் தந்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இந்த படம் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா 2' என்று கூறப்பட்டு வருகிறது.

ஜெயம் ரவி:

ஜெயம் ரவி:

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி நேற்று மாலை வெளியிட்டார். அதில் 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற டைட்டிலுக்கு மேலே ஜி.வி.பிரகாஷ் வித்தியாசமான கெட்டப்பில் நின்று கொண்டிருக்கிறார்.

காதலைத் தேடி நித்யா நந்தா:

காதலைத் தேடி நித்யா நந்தா:

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தில் இரண்டு நாயகிகளுடன் நடித்திருந்தார் ஜி.வி.பிரகாஷ். இந்த படத்தில் இவருக்கு மூன்று நாயகிகள் என கூறப்பட்டுள்ளது.

அடல்ட் காமெடி படம்:

அடல்ட் காமெடி படம்:

ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படமான 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் அவர் பெரும் சிரத்தையுடன், ‘காதலைத் தேடி நித்யா நந்தா'வை அடல்ட் காமெடி படமாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யா நந்தா:

நித்யா நந்தா:

நிஜ வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நித்யா நந்தா. தற்போது அவரது பெயரையே படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். படத்தில் ஜி.வி.க்கு மூன்று நாயகிகள் வேறு. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எகிறத் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X