கஜா புயல்: ரூ. 25 லட்சம் அளித்த விஜய் சேதுபதி.. 2 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அளித்த ஜி.வி.பிரகாஷ்!
கஜா புயல் நிவாரணப் பொருட்களை இரண்டு லாரிகளில் அனுப்பி வைத்தார் ஜி.வி.பிரகாஷ்.
Recommended Video

சென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்தை வழங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல், டெல்டா மாவட்டங்களுக்கு இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.
கஜா புயலால் நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் நிறைய பேர் தங்களால் முடிந்த உதவிகளை அம்மாவட்ட மக்களுக்கு செய்து வருகிறார்கள்.

இதேபோன்று தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சத்தை வழங்கி இருக்கிறார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் இரண்டு லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன் .
அவர்களுக்கு தேவை அனுதாபமோ,ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம். பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம்", என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











