கஜா: சிம்பு சொல்லும் பலே யோசனை- செல்போன் நெட்வொர்க்குகள், இபிஎஸ் அரசு ஏற்குமா?

By Siva

Recommended Video

சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள்- வீடியோ

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய சிம்பு ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

நிதியுதவி

நிதியுதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகிறார்கள். இது போன்று எப்பொழுது நடந்தாலும் பலரும் உதவி செய்கிறார்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய நினைத்தாலும் நாம் கொடுக்கும் காசு அங்கு போய் சேர்கிறதா இல்லையா, சேர்ந்த காசு அவர்களுக்கு எப்படி உதவியாக உள்ளது என்பது எல்லாம் நமக்கு தெரிவது இல்லை. இது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து கொண்டே இருக்கு.

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

தமிழக மக்கள் அனைவரும் உதவி செய்ய எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அது என்னவென்றால், நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம் , ஒரு காலர் டியூனுக்கு 10 ரூபாய் செலவு செய்கிறோம். இயன்றவர்கள் 100 ருபாயோ, இல்லாதவர்கள் 10 ரூபாயோ செல்போன் நெட்வொர்க் மூலம் கொடுக்க முடியும்.

அரசு

எல்லா நெட்வொர்க்கும் சேர்ந்து யார், யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டி, அதை அரசு ஏற்று அந்த பணத்தை டெல்டா பகுதிக்கு இப்படி செலவு செய்தோம் என்ற கணக்கு காட்டுவதாக இருந்தால் இந்த விஷயத்தை செய்யலாம் என்பதை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன். நான் தெரிவித்துள்ள ஐடியா சரியாக இருந்தால் #UniteForHumanity #UniteForDelta என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யுங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் நாம் நன்கொடை அளித்து உதவி செய்வோம் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சிம்புவின் ஐடியாவுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் லட்சக்கணக்கில் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கதறுகிறார்கள். இந்நிலையில் சிம்புவின் யோசனை சரியானதாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X