கருடன் உன்னி முகுந்தனின் அடுத்த படம்.. மார்கோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. ரசிகர்கள் வரவேற்பு
சென்னை: துரை செந்தில் குமார் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் கருடன். சூரி கதாநாயகனாக நடிக்க; சசிக்குமாரும், மலையாள ஹீரோவான உன்னி முகுந்தனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. உன்னியின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் அடுத்ததாக நடிக்கும் மார்கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மலையாள திரையுலகில் தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் உன்னி முகுந்தன். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உன்னி முகுந்தன் நடிக்கும் ஒவ்வொரு புதிய படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அவர் இப்போது மார்கோ படத்தில் நடித்துவருகிறார். க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், ஷெரீப் முஹம்மது மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் இணைந்து 'மார்கோ' படத்தை தயாரிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பு: ஒரு சிறந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் இல்லாமல், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ஒரு எட்ஜ் ஆஃப் தி சீட் ஆக்ஷன் த்ரில்லரை மார்கோ கொண்டுள்ளது. அனிமல் படத்தை போலவே வெறித்தனமான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீப காலங்களில் மலையாளத்தில் இதுபோன்ற ஆக்ஷன் காட்சிகள் வெளியாகவில்லை. கலகிங் சன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் சிறந்த அதிரடி ஆக்சன் இயக்குனர்களால் ஆக்ஷன் காட்சிகள் கையாளப்பட்டுள்ளன. மார்கோ படம் பான்-இந்திய அளவில் வெளியாக உள்ளது.
கேஜிஎஃப் இசையமைப்பாளர்: கூடுதல் சிறப்பம்சமாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'கேஜிஎஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மார்கோ படத்துக்கு இசையமைக்கிறார். ரவி பஸ்ரூர் முதன்முறையாக இசையமைக்கும் மலையாளப் படம் மார்கோ. மேலும் மலையாளத்தில் முதல் வில்லன் ஸ்பின் ஆஃப் படம் என்ற பெருமை மார்கோவின் மற்றொரு சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நட்சத்திரங்கள்: உன்னி முகுந்தனுடன் மார்கோ படத்தில் சித்திக், ஜெகதீஷ், அன்சன் பால், கபீர் துஹான்சிங் மற்றும் அபிமன்யு திலகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரதி தரேஜா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் சில புதுமுகங்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான 'மார்கோ' உருவாகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது மார்கோ. இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் உன்னி முகுந்தன் ரத்தம் தோய்ந்த கத்தியை தனது வாயில் கடித்தபடி இருக்கிறார். அந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஹனிஃப் அடேனி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. முதன்முறையாக ஹனிஃப்பும், உன்னியும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











