கௌதம் கார்த்திக் -சேரன் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு... பாடல் வெளியீடு

சென்னை : நடிகர் கௌதம் கார்த்திக், சேரன், சரவணன் என அதிகமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

இந்தப் படத்தை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் லிரிக் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக் கோலிவுட்டில் தனக்கான நிலையான இடத்தை பிடிக்க பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார். அவரது தந்தையை போலவே விளையாட்டான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்த அவர், தற்போது வித்தியாசமான கதைக்களங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

குடும்ப சென்டிமெண்ட்

குடும்ப சென்டிமெண்ட்

தற்போது குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக். படத்தை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். சித்து குமார் இசையமைப்பில் படத்தின் லிரிக் வீடியோ பாடல் ஒன்றை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.

முக்கிய வேடத்தில் சேரன்

முக்கிய வேடத்தில் சேரன்

படத்தில் இயக்குநர் சேரன், சரவணன், ஷிவாத்மிகா, டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

உறவுகளின் பெருமை

உறவுகளின் பெருமை

குடும்ப உறவுகளின் பெருமையை கூறும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் படத்தை பிரம்மாண்டமான வகையில் தயாரித்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் ப்ரமோஷன் பணிகளும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

லிரிக் வீடியோ பாடல் வெளியீடு

லிரிக் வீடியோ பாடல் வெளியீடு

படத்தின் ட்ரெயிலர், டீசர் உள்ளிட்டவற்றை வெளியிட உள்ளதாக முன்னதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது படத்தின் லிரிக் வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் கலர்புல்லாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.

சொந்தமுள்ள வாழ்க்கை பாடல்

சொந்தமுள்ள வாழ்க்கை பாடல்

சொந்தமுள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கும் மேலே என்று துவங்கும் அந்தப் பாடலை கருங்குயில் கணேசன் பாடியுள்ளார். பாடலின் வரிகளை எழுதியுள்ளார் படத்தில் நடித்துள்ள பாடலாசிரியர் சினேகன். உறவுகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் பல படங்கள் கோலிவுட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் இந்தப் படமும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X