மனைவி மஞ்சிமாவுக்கே டஃப் கொடுக்கிறாரே.. கெளதம் கார்த்திக்கின் புதிய லுக்கை பார்த்தீங்களா?

சென்னை: பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா மோகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். முதல் படம் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன.

Gautham Karthik Manjima Mohan Hero

அடுத்ததாக என்னமோ ஏதோ படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான வை ராஜா வை படத்திலும் நடித்தார். முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமௌலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, யுத்த சத்தம், பத்து தல, ஆகஸ்ட் 16 1947 போன்ற படங்களில் இதுவரை நடித்துள்ளார்.

நவரச நாயகனின் மகன்: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் கடல் படத்திலிருந்து ஹீரோவாக நடித்து வருகிறார். சிம்புவுடன் இணைந்து அவர் நடித்த பத்து தல திரைப்படம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக ஆர்யாவுடன் இணைந்து மிஸ்டர் எக்ஸ் மற்றும் கிரிமினல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மஞ்சிமா மோகனுடன் திருமணம்: சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமான மலையாள நடிகை மஞ்சிமா மோகனுடன் தேவராட்டம் படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் காதலில் விழுந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

புது லுக்: பத்து தல, ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட படங்களில் ரக்கட் பாயாக மீசை, கொஞ்சம் தாடி எல்லாம் வைத்து நடித்து வந்த கௌதம் கார்த்திக் தற்போது ஆர்யாவுடன் நடித்து வரும் மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக க்ளீன் ஷேவ் லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த லுக்குடன் தனது மனைவி மஞ்சிமா மோகனுடன் கன்னத்துடன் கன்னம் உரசி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X