சிம்புவுடன் சேரும் ஜெனீலியா
காள படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஜெனீலியா ஒத்துக் கொண்டுள்ளாராம். இதனால் ஹீரோயின் பிரச்சினை சரியாகி விரைவில் படப்பிடிப்பு தொடங்கப் போகிறதாம்.
சிம்பு, திமிரு இயக்குநர் தருண் கோபி இணையும் படம் காள. வல்லவனுக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பலரையும் அணுகினர்.பாவனா, கோபிகா, திரிஷா, நயனதாரா என பலரையும் கேட்டுப் பார்த்தும் எல்லோரும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி விலகி ஓடி விட்டனர். சிம்புவின் பள்ளிக்கூட தோஸ்த் திரிஷாவும் டபாய்த்து விட்டதால் அப்செட் ஆகி விட்டார் சிம்பு.
திரிஷா தன்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக 2 வாரங்களுக்கு முன்புதான் சிம்பு கூறியிருந்தார். ஆனால் திரிஷா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். ஆனால் இப்போது திரிஷாவை விட்டு விட்டார் சிம்பு. மாறாக அவருக்கு ஜோடியாக ஜெனீலியா (பாய்ஸ் ஹரிணி) நடிக்கவுள்ளாராம்.
இதுதொடர்பாக ஜெனீலியாவிடம் பேசி விட்டாராம் சிம்பு. ஜெனீலியாவும் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.
ஜெமினியின் மகளான அந்தக் காலக் கனவுக் கன்னி ரேகாவும் படத்தில் இருக்கிறார். சிம்புவின் அம்மாவாக அவர் நடிக்கவுள்ளார்.
சிம்புவுடன் ஜோடி போடுபவர்களைப் பற்றி கிசுகிசு குண்டக்க மண்டக்க வரும். ஜெனீலியா, சிம்பு ஜோடியைப் பற்றியும் ஏதாவது வம்புச் செய்தி வருமா?


Click it and Unblock the Notifications











