Ghilli vs Thunivu Re release Box Office: 2வது முறை ரீ ரிலீஸான கில்லி கோடிக்கணக்கில் வசூல்.. துணிவு?
சென்னை: விஜய்யின் கில்லி திரைப்படம் ஏற்கனவே கடந்த 2024ம் ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவிலேயே ரீ ரிலீஸ் ஆகி அதிக வசூலை ஈட்டிய படம் என்கிற பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
அதனை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினிகாந்தின் படையப்பா படம் கூட கில்லி ரீ ரிலீஸ் வசூலை முந்தவில்லை. ஆனால், படையப்பா திரைப்படம் அதிக வசூல் செய்த ரீ ரிலீஸ் கோலிவுட் படங்களில் 2வது இடத்தை பிடித்தது.

அஜித் குமாரின் மங்காத்தா திரைப்படம் அந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்தது. ஆனால், சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட அஜித் குமாரின் துணிவு திரைப்படம் சில லட்சங்கள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும் ரீ ரிலீஸான கில்லி பட வசூல் எவ்வளவு?: தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்மர் ரிலீஸாக வெளியானது விஜய்யின் முதல் 50 கோடி வசூல் படம் என்கிற அந்தஸ்த்தை கில்லி படம் அடைந்தது. 2024ல் முதன்முறையாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில், கடந்த வாரம் கில்லி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 4 நாட்களில் 2.25 கோடி ரூபாய் வசூலை கில்லி அள்ளியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கில்லி வசூல் வெள்ளிக்கிழமை - 60 லட்சம் ரூபாய்
சனிக்கிழமை - 65 லட்சம் ரூபாய்
ஞாயிற்றுக்கிழமை - 75 லட்சம் ரூபாய்
திங்கட்கிழமை - 25 லட்சம் ரூபாய்
என மொத்தம் 4 நாட்களில் - 2.25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக சினி டிராக் தகவல் தெரிவித்துள்ளது.
துணிவு வசூல் குறைவு: ஆனால், அதே சமயத்தில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை அதிகபட்சமாக 50 லட்சம் கூட வசூல் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணிவு வசூல் வெள்ளிக்கிழமை - 18 லட்சம்
சனிக்கிழமை - 15 லட்சம்
ஞாயிற்றுக்கிழமை - 9 லட்சம்
திங்கட்கிழமை - 3 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சினி டிராக் தகவல் வெளியிட்டுள்ளது.
மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி திரைப்படம் 2.25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
தெறி vs தாய் கிழவி: இந்த வாரம் சரத்குமாரின் ஆழி, ஆரி அர்ஜுனின் ஃபோர்த் ஃப்ளோர், ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி உள்ளிட்ட புதிய படங்களுக்கு கடும் போட்டியாக அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் நடித்த தெறி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது. பாக்ஸ் ஆபீஸில் இந்த வாரம் தெறி தெறிக்கவிடுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











