எல்லா அம்மாக்கள் மேலயும் மரியாதை... பெண்கள் தெய்வத்திற்கு சமம், சிவகார்த்திகேயன்
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார்
முன்பு இருந்ததை விடவும் இப்பொழுது எல்லா அம்மாக்கள் மீதும் மரியாதை அதிகமாயிருச்சு என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது. தமிழில் வெளியாகும் இவரது பல படங்கள் தெலுங்கு, மலையாள ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் இப்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படத்தை தொடர்ந்து பிரியங்கா மோகன் இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். டான் ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார்
சிவகார்த்திகேயனின் பல படங்கள் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்று வர இப்பொழுது நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். ஜாதி ரத்னாலு என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல உக்ரெய்ன் நடிகை இந்தப் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மகன் குகன் தாஸ்
சினிமாவில் அனைவரும் மதிக்கத்தக்க நடிகராக எந்த ஒரு கிசுகிசுவும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கையில் சமீபத்தில் இவருக்கு மகன் பிறந்துள்ளார். அவருக்கு குகன் தாஸ் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

அம்மாக்கள் மேல மரியாதை அதிகமாயிருச்சு
ஆராதனா பிறந்த பொழுது தான் ஷூட்டிங்கில் இருந்ததால் மனைவி ஆர்த்தியுடன் இருக்க முடியவில்லை ஆனால் குகன் தாஸ் பிறந்தபோது சிவகார்த்திகேயன் மனைவியுடன் ஆபரேஷன் தியேட்டரில் இருந்துள்ளார். பிரசவத்தின் போது பெண்கள் படும்பாட்டை பார்த்த சிவகார்த்திகேயன் அதன் பிறகு ஆர்த்தியின் மீது மிகப்பெரிய மரியாதை வந்துள்ளது எனவும் ஆர்த்தி மட்டுமல்லாமல் எல்லா அம்மாக்கள் மீதும் இருந்த மரியாதை அதிகமாகி உள்ளது. பெண்கள் எல்லாம் தெய்வத்திற்கு சமம் என பேசியுள்ளார். ஏற்கனவே குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டுப் பிள்ளையாக இருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது நிஜமாகவே அனைவரது மனங்களிலும் நம்ம வீட்டுப் பிள்ளையாக குடியேறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











